Powered By Blogger

Thursday, November 6, 2014

சின்ன பிரச்னை... பெரிய கண்டுபிடிப்பு!


அர்ஜூனுக்கு 13 வயது ஆகிறது. சென்னை வேலம்மாள் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவன். அர்ஜூனைத் தமிழ்நாட்டில் தெரிந்து வைத்திருப்பவர்களைவிட அதிகமாக அமெரிக்கக்காரர்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள். காரணம், அர்ஜுனின் டெக்னாலஜி அறிவு. ''இரண்டரை வயசு இருக்கும்போதே கம்ப்யூட்டர் பழக ஆரம்பிச்சிட்டேன். அதுக்குக் காரணம் என் அப்பா, அம்மாதான். சிஸ்டம் உயரம்கூட இல்லாத என்னைத் தலையணைலாம் போட்டு அதுமேல உட்கார வெச்சுக் கத்துக்கொடுத்தாங்க. தினமும் மூணு மணி நேரம் இன்டர்நெட்டில் செலவு பண்ணுவேன். ஆனா ஃபேஸ்புக், ட்விட்டர்னு டைமை வேஸ்ட் பண்ண மாட்டேன். சீக்கிரமே புரோகிராம் கோட் எழுதக் கத்துக்கிட்டேன். ஒருநாள் ஸ்கூலுக்குப் போயிருந்தேன். 'புயல் தாக்கப் போகுது’னு திடீர் நியூஸ் வந்துச்சு. ஸ்கூல் பஸ்ல வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். என்னை கான்டாக்ட் பண்ண முடியாம அம்மா ரொம்பப் பயந்துட்டாங்க. அவங்களுக்காக நான் உருவாக்கின ஆப்ஸ்தான் 'EZ School Bus locator’. இதுபடி ஸ்கூல் ஸ்டூடெண்ட் ஐ.டி கார்டுல க்யூ.ஆர் கோட் இருக்கும். பஸ்ஸில் ஏறின உடன் டிரைவரோ, ஹெல்ப்பரோ அதை ஸ்கேன் பண்ணினா வீட்டுக்குத் தகவல் வந்திரும். பஸ்ல பையன் இருக்கானா, பஸ் இப்போ எங்க வந்துட்டு இருக்குனு செக் பண்ணிக்கலாம். டிரைவர்கிட்ட போன் பண்ணியும் கேட்டுக்கலாம். ஆண்ட்ராய்டு போன் இல்லாதவங்க ‘WMC’ (Where is my child) டைப் பண்ணிக் குறிப்பிட்ட டிரைவருக்கோ, கண்டக்டருக்கோ மெசெஜ் பண்ணாப் போதும். எல்லாத் தகவலும் வந்திரும்.

இந்த மாதிரி கண்டுபிடிப்புகளுக்காக அமெரிக்காவின் எம்.ஐ.டி-யில் நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன். அதனால் இந்தியாவைவிடவும் அமெரிக்காவில் என் ஆப்ஸை அதிகமா டவுன்லோடு பண்றாங்க. ஒரு வருஷம் முன்னாடி ஸ்ருதினு குட்டிப் பொண்ணு ஸ்கூல் பஸ்ல வரும்போது கீழே விழுந்து இறந்தாங்களே... அவங்களோட அம்மா இந்த ஆப்ஸ்காக எனக்கு ஒரு பரிசு கொடுத்தாங்க. அதுதான் என் வாழ்க்கையிலேயே முக்கியமானப் பரிசு. மக்களுக்குப் பயன்படுற மாதிரி ஆப்ஸ் கண்டுபிடிக்க முடிவு எடுத்திருக்கேன்.'' ''எதிர்காலத் திட்டம்?'' ''கூகுள் மாதிரி ஆசியாவிலேயே பெரிய நிறுவனமா என்னோட லேட்ரல் லாஜிக் இந்தியா நிறுவனத்தைக் கொண்டு வரணும்!'' ''அதுக்குள்ள பேரே வெச்சாச்சா?'' ''கம்பெனியோட மோட்டோவே டிசைன் பண்ணியாச்சு. இதுதான் மோட்டோ... 'பெரிய கண்டுப்பிடிப்புகள் சிறிய பிரச்னைகளில் இருந்தே உருவாகிறது’!''



No comments:

Post a Comment