Powered By Blogger

Friday, November 7, 2014

கனவு பற்றிய தகவல்கள்




1 .
கூடுதலான கனவுகள் 5 தொடக்கம் 20 நிமிடங்கள் வரையே நீடிக்கிறது

2 .
முன்னர் நம்பியது போல கறுப்பு வெள்ளையில் மட்டும் கனவு தெரிவதில்லை .. 

3 .
ஒவ்வொருவரும் ஒரு இரவில் பல தடவைகள் கனவு காண்கிறோம் ஆனால் எமது ஆயுளில் நாம் காணும் கனவு நீளம் 6 வருடங்கள்  (கால நேர அளவில் மொத்தமாக )

4 .
குருடர்கள் தொடுதல் , நுகர்தல், ஒலி போன்ற வடிவுகளில் கனவை உணர்வார்கள் 


5 .   REM
உறக்க நிலை அல்லாத போது யானை எழுந்து நிற்கும் . REM உறக்க நிலையின் போதே சரிந்து படுக்கும் . (வேறு விலங்குகளும் )

 


ஆனால் கனவுகள் என்ன ? அன்றாடம் நடைபெறும் விடயங்கள் வழமை போலவே உறக்கத்திலும் மூளை செயல்ப்படுத்துகிறதா ? அல்லது மூளையின் எழுந்தமானமான  செயல்ப்பாடா ? அல்லது  கனவுகளால் எமது வாழ்வின் பிரச்சனைகளுக்கு முடிவு  கிடைக்குமா ?   நடக்க இருக்கும் நிகழ்வுக்கு முன்னெச்சரிக்கையா?  என பல கேள்விகள் எழும் .

ஆனால் கனவை பற்றி முதன் முதலாக SigmundFreud. என்பவர்   ஆராய்ந்த   போது  கனவுகளாக வெளிப்படுவது யாதெனில் ,  நாம் எண்ணும் எண்ணங்கள் இந்தசமூகத்தின்  கட்டுப்பாடுகளுக்குள்  நிறைவேற்றமுடியாவிட்டால் அது கனவுகளாக வெளிப்படும் என கூறியிருந்தார் . அதாவது நாம் ஆசைப்படும் என்ன்னகள்  வேறு காரணிகளால் தேக்கி வைக்கும்  போது அவை கவவில் வெளிப்படும் என்பது அவர் கருத்து
 
Sigmund Freud






உதாரணமாக   அவர் கூறிய கருத்து " உதாரணமாக குகையினூடு ரயில் செல்வது போல கனவோ ஒரு பொருள் செல்வது போல கனவோ தோன்றினால் அது உடலுறவை வெளிப்படுத்துவதாகவே இருக்கும் .. 


"Sometimes, a cigar is just a cigar.என்று ஒரு கருத்தையும் அவர் முன் வைத்தார் .  அதாவது சில வேளைகளில் வேறொரு நிகழ்வை கனவுகள் பிரதிபலிப்பதில்லை . சில வேளைகளில் சிகரெட் என்றால் அது சிகரெட் தான் ... 


ஆனால் அவரை தொடர்ந்த "Carl Jung " என்பவர் அவரின் எண்ணங்களை தொடர்ந்தாலும் தனது சொந்த சிந்தனைகளையும் முன் வைத்தார் . அவர் கனவுகளின் மூலம் தேவைகளில் இருந்து உதிக்கிறது எனவும் அவை பிரச்சனைகளை தீர்க்கிறது எனவும் கூறியிருந்தார்


ஆனால் அவர்களை தொடர்ந்த அலன் ஹோப்சன் போன்றோர் கனவுகள் வெறும் இலத்திரனியல் மாற்றங்களால் உருவாவதே என கூறியிருந்தனர்


நாம் உறங்கும் போது உறக்கத்தில் 5 படி நிலைகளை கடக்கிறோம் .







 









1 . உறக்கத்தில் இருந்து எழக்கூடிய நிலை .. இலேசான  உறக்கம்
2 .ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லல்
3. ஆழ்ந்த உறக்க நிலை

4.  90 நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று 4 ஆவது நிலையை தாண்டி 5 ஆவது      நிலைக்கு செல்கிறோம் . அது தான் REM நிலை . அதாவது கண் அசைவு நிலை . 


1953 இல் தான் இந்த REM  கண்டு பிடிக்கப்பட்டது . கண் அசைவுகள் இடம் பெறும் எனவும் இதன் போது இரத்த  அழுத்தம் இருதய துடிப்பு போன்றன அதிகமாக இடம் பெறுவதாகவும் கூறப்படுகிறது





கனவுகள் இதுவரை யாராலும் சரியான விளக்கம் கொடுக்கப்பட முடியாத ஒன்று . விஞ்ஞானிகளின் கருத்துப்படி மூளையில் ஏற்ப்படும் மாற்றங்களே கனவுகளுக்கு காரணம் எனப்படுகிறது . இருந்தாலும் சரியாக இதுவென கணித்து கூற முடியாத இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கும் விடயம் தான் கனவுகள் .


ஆனால் கனவுகள் பற்றிய  தொடர் ஆய்வாளர்கள் ஒவ்வொரு கனவும் எமது எண்ணங்களின் வெளிப்பாடு எனவும் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தங்களும் கொண்டன என கண்டறிந்துள்ளனர் .



பொது இடத்தில் ஆடை இல்லாமல் இருத்தல் 

நாம் பொது இடங்கள் பாடசாலை அல்லது வேலைத்தளத்தில் இருப்போம் திடீரென ஆடை இல்லாதது போல உணர்வு தோன்றும் .

இவ்வாறான கனவுகள் நாம் எமது நிஜ வாழ்க்கையில் இருந்து எதையாவது  மறைக்க முற்ப்படும் போது இவ்வாறான கனவுகள் தோன்றும் .

நாம் அந்த விடையத்தை மறைக்க இன்னும் தயாராகவில்லை என உள் மனதில் எண்ணம் தோன்றும் போதும் அவ்வாறான கனவுகள் தோன்றும் .

விழுந்துகொண்டிருப்பது போல கனவு ....

ஏதாவது உயரமான இடத்திலிருந்து விழுவது போல கனவு தோன்றும் ,திடீரென எழுவோம் .

ஏதாவது பிரச்சனைகள் தோன்றும் போது அதை எம்மால் தடுக்க முடியாவிட்டால் இவ்வாறான கனவுகள் தோன்றும் .
பாடசாலையில் அல்லது வேலைத்தளத்தில் ஏதாவது தோல்விகள்  ஏற்ப்பட்டால் அந்த பிரச்சனையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் இவ்வாறான கனவுகள் தோன்றும் .
யாராவது துரத்துவது போல 



என்ன பிரச்சனை என்ன காரணம் என்று தெரியாது . துரத்துவது போல கனவு  தோன்றும் .

இது கூடுதலாக நாம் செய்யும் வேலைகளிலும் தங்கி உள்ளது .
உதாரணமாக 
கூடுதலாக குடித்தால் , குடிப்பது ஒரு பிரச்சனையாக உங்களை தொடர்ந்து வருகிறது என்பதை குறிப்பிடும் .

பரீட்ச்சை எழுதுவது  போல (அல்லதுபரீட்ச்சை இருப்பதை மறந்து போதல்

ஒரு பரீட்ச்சை இருப்பதை உணர்வீர்கள் . ஆனால் சில நேரங்களில் வகுப்பறையி சென்றடைய முடியாமல் இருக்கும் .

ஒரு சவாலை வாழ்க்கையில் எதிர்கொள்ளும் போது அதற்க்கு நீங்கள் தயாராகவில்லை என்று உணர்ந்தால் அல்லது அந்த சவாலை புறக்கணித்தால் இவ்வாறான  கனவுகள் தோன்றும் .

ஓடுவது போல தோன்றல்
  
ஓடுவது போல தோன்றும் ஆனால் எங்கும் செல்வதோ அல்லது அசைவது போலவோ தோன்றாது .

அதாவது ஒர்றேநேரத்தில் பல வேலைகள் செய்யும் போது எதுவும் கவனத்தில்கொள்ளப்படாத நிலைமைகளில் இவ்வாறான கனவுகள் தோன்றும் .





லூசிட் கனவுகள்(Lucid dreaming) - கனவில் கனவு

 

 

நீங்க யாரும் நிச்சயம் கனவு காணாம இருந்திருக்க மாட்டீர்கள்  . ஆனால்  அதை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை எனலாம் . தேஜாவு போல . அதாவது சில நேரங்களில் சில இடங்கள் நிகழ்வுகள் ஏற்க்கனவே பார்த்தது போல இருக்கும் .ஆனால் இவை இரண்டும் அடிக்கடி அனைவருக்கும் நடப்பது . இதுவரை விடை காணாத புதிராய் இருப்பது கனவுகள் தான் . மருத்துவம் ,அறிவியல்,மனோதத்துவம்  என பல பக்கங்களில் இருந்தும் விளக்கங்கள் குவிகிறது .

இந்த வகையில் சில கனவுகள் நாம் காணும் போது அவை கனவு தான் என தெரியும் . ஆனால் சில கனவுகள் காணும் போது நிஜமாக நடப்பது போலவே இருக்கும்  . அந்த வகை கனவுகள் எளிதில் மறக்க முடியாதது . உங்களால் அனைத்தையும் உணர்ந்து விளக்கமாக பார்க்க முடியும் . அது தான்  லூசிட் கனவுகள் . லூசிட் கனவுகளை நீங்கள் உணர்ந்து கனவு தான் காண்கிறீர்கள் என உணர்ந்து அனுபவிக்க முடியும் . இன்செப்ஷன் படம் பார்த்தவர்களுக்கு கிட்டத்தட்ட அதே போல இருப்பது போல தோன்றும் . லூசிட் கனவுகளை எமக்கு ஏற்றது போல அமைத்துக்கொள்ளலாம் .விரும்பிய இடங்களுக்கு செல்லலாம் .இதன் முக்கியத்துவத்திட்க்காக ஒரு உதாரணம் சொல்கிறேன்.



  இந்த லூசிட் கனவுகள் பல முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டது என்பது உண்மை . நீல் போர் கண்ட கனவு அவருக்கு நோபெல் பரிசை பெற்றுக்கொடுத்தது .எமது கோள்கள் சூரியனை சுற்றுவது  போல அணுவை சுற்றி இலத்திரன்கள் காணப்படுவதை கனவிலேயே அவர் கண்டார் .


இந்த கனவு REM உறக்க நிலையிலேயே வரும் . அதாவது உறக்கத்தின் 5 நிலைகளில் 5 ஆவது நிலையில் . இந்த லூசிட் கனவுகளின் பின்னணியை  அலசினால் கொஞ்சம் தெளிவு பிறக்கும் . இது புராதன காலம் தொட்டே பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இனத்தவர்கள் பலரிடமும் நிலவிய கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்தது . அமெரிக்க பழங்குடிகள் இந்த கனவுகளை அவர்கள் இறைவனை அடைய  ,தேவதைகள் ,ஆவிகளின் உலகத்துடனான வாசல் போல நினைத்திருந்தனர் .

Aborigines எனப்படும் அவுஸ்திரேலிய மூத்த பழங்குடிகள் உலகின் தோற்றத்தை ஒரு கனவாக தமது குறிப்புகள் ,கதைகளில் குறிப்புட்டுள்ளனர் . சிலர் தாம் காணும் கனவை குறியீடுகளாக வரைந்து வைத்துள்ளனர் .




Aborigines






இதிலிருந்து லூசிட் கனவுகள் புதியவை இல்லை என்பது தெரிகிறது ..அரிஸ்டாடில் இந்த கனவுகள் பற்றி எழுதியிருக்கிறார் ஆனால் சரியான பதம் இல்லை  . 


ஆனால் திபெத்திய புத்தர்கள் பலர் இந்த லூசிட் கனவுகள் போல சிலவை  பற்றி நீண்டகாலம் பயிற்சி,ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அது dream yogaa (யோகா ) .





உங்கள் நிலையை உணர்த்தி எப்போதும் விழிப்புடன் இருக்க மிகவும் உதவும் டிரீம் யோகா . எப்போதும் புத்த சமயத்தில் உள்ள நம்பிக்கை நிஜத்தை உணர்தல் .மாயையில் இருந்து விலகி இருத்தல் . லூசிட் கனவு காண்பவரால் அது கனவு உலகம் என அறிய முடியும் . கனவு காணும் போது அவர்களுக்கு  விருப்பமானது போல கனவை ,நிகழ்வுகளை  செலுத்தலாம் .



 Frederik van Eeden


டச்சு மனோதத்துவவியலாளர்   Frederik van Eeden என்பவரே அதற்க்கான விளக்கங்களுடன் வந்தார் . சாதாரண கனவுகள் தொட்டு கனவில் 9 வகைகள் இருப்பதை கூறினார் .அவர் தனது லூசிட் கனவுகள் பற்றியும் குறித்துள்ளார் .ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பாலியல் உறவு சம்மந்தப்பட்ட கனவுகளே கூடுதலாக வந்துள்ளது .





ஆனால் இது பிரசித்தி பெற்றது ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மனோதத்துவவியலாளர்  Stephen Laberge

என்பவராலே .இவர் தான் கனவுகளை நாம் எமது படைப்புகள் ,கண்டுபிடிப்புகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என கூறியவர் .
Stephen Laberge

No comments:

Post a Comment