Powered By Blogger

Friday, November 21, 2014

மாயன்கள் வரலாறு பற்றி சில தகவல்கள்

 மாயன் இனத்தவர்கள், அவர்களின் பொற்காலத்தின் போது பல துறைகளின் நுணுக்கங்களை ஆராய்ந்திருக்கிறார்கள், கலைத்திறனும் புத்திக் கூர்மையும் பெற்று விளங்கினார்கள். 16-ம் நூற்றாண்டின் போது தென் அமேரிக்கப் பகுதியை ஆட்சி செய்த ஸ்பெயின் நாட்டினரின் கடுமையான தாக்குதலால் இப்பகுதி அடியோடு அழிந்து போனது. அவர்களின் கண்டுபிடிப்பும் எழுதிய நூல்களும் அச்சமயம் அக்னிபகவானுக்கு இரையாக்கப்பட்டன.

இன்று எத்தனையோ அறிவியல் வளர்ச்சியை கண்டுவிட்டதாக பெருமைப்பட்டுக்கொள்ளும் எங்களது கட்டுமானங்களை விட அவர்களது கட்டுமானங்கள் காலத்தைவென்று கம்பீரமாக இன்றும் உள்ளன. பெரிய அளவிலான நகர வடிவமைப்பு, எழுத்துக்கள், மற்றும் அறிவு நுணுக்கங்கள் மாயா இனத்தவரின் போற்றத்தக்க கலைத்திறன்களாகும்.


தொல்லியல் மற்றும் சமூகவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மாயன் கலாச்சாரத்தில் ஆர்வம் ஏற்பட்டதில் சிதிலமடைந்த மாயன் நகரங்களும் கட்டிடங்களும் பெரும் பங்காற்றியிருக்கின்றன. மற்ற தொல் நாகரிகங்களைப் போல் அல்லாமல், மாயன்கள் இரும்பு போன்ற உலோகங்கள் மற்றும் சக்கரங்களைப் பயன் படுத்தாமலயே மிகப் பெரிய மத சடங்குகளுக்கான இடங்களையும், பிரமிடுகளையும் இருப்பிடங்களையும் கட்டியுள்ளனர். 

எகிப்தியப் பிரமிடுகளை அடுத்து இந்நகரில் காணப்படும் பிரமிடுகளே பிரசித்தி பெற்று விளங்குகிறன. இப்பிரமிடுகளை சுற்றிலும் 4 பெரிய படிகட்டுகளும் அவற்றுள் அடங்கிய 365 படிக்கட்டுகளும் காணபடுகிறது. இவையாவும் ஒரு ஆண்டிற்கான 4 காலங்களையும் 365 நாட்களையும் குறிப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் போன்றவற்றின் சுழற்சி முறைகளை வெகுவாக அவதானித்து ஆவணப்படுத்தியிருந்தனர். சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்கூட்டியே கணக்கீட்டுத் தீர்மனிக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். சடங்குகளில் அதீத நம்பிக்கை பெற்றிருந்த மாயன்கள் வானியல் நிகழ்ச்சிகளை அடியோட்டியே சடங்குகளை நடத்தினர்.ட்ரெடெக்ஸ் எனப்படும் மாயன் பஞ்சாங்கக் குறிப்பேட்டிலிருந்து இதற்கான ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளன. 



மாயன் நாகரிகம் அமெரிக்காவில் வசித்த செவ்விந்தியர்களிடையே நிலவிய நாகரிகம். இந்த நிலப்பகுதிகள் காலத்தின் போக்கால் அரசியல் மாற்றங்களால் இன்று மத்திய அமெரிக்காவில் ஐந்து நாடுகளாக இருக்கின்றன. அவை மெக்ஸிகோ, கௌதமாலா, பெலீஸ், ஹோண்டுராஸ், எல் சால்வடார் ஆகியனவாகும்.
மாயன்கள், பல இனங்களாக வாழ்ந்திருந்தாலும், அவர்களின் 'இன்கா' இனம்தெற்கே பரவலாகப் பிரிந்தே வாழ்ந்திருக்கிறது.


கி.மு 11,000 – மாயன் பகுதிகளில் மக்கள் முதன் முதலாக குடியேறத் துவங்கினர். இவர்கள் அக்கம்பக்க நாடுகளில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதபடுகிறது. இவர்கள் தங்கள் உணவுகளான காய்கறிகள், பழங்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றை பச்சையாக சாப்பிட்டு வாழ்ந்தார்கள்.

கி.மு. 2600 - மாயன் நாகரிக தொடக்கம். மக்கள் வேட்டையை மட்டும் நம்பியிருக்காமல், விவசாயத்தில் ஈடுபட துவங்கினர். கி.மு. 700 - மாயங்களின் எழுத்துக்கள் தொடங்கின. இவை சித்திர எழுத்து என்ற வகை. அதாவது வாசிக்கும் முறையில் இல்லாமல் படம் வரைந்து விளக்கும் முறை. கி.மு. 400 - இந்த காலகட்டத்திலோ அல்லது இதற்க்கு முன்பாகவோ காலண்டர்கள் கண்டுபிடிக்கபட்டிருக்கலாம். கி.மு. 300 - மன்னர்கள், பிரபுக்கள்,பூசாரிகள் என்று சீரான ஆட்சிமுறை. ஒவ்வொரு பதவிக்குமான பொறுப்புகள் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

Teotihuacan city
கி.மு. 100 - டேயோட்டிவாக்கன் (Teotihuacan) என்ற நகரம் மாயன் மக்களால் உருவாக்கப்பட்டது. இந்த நகரம் இன்றும் இருக்கிறது. கலை, மதம், வாணிபம், பிரமிடுகள், கோயில்கள், அரண்மனைகள், பொதுச்சதுக்கங்கள் பிரம்மாண்டமாக இருந்த ஊர் இது. கி.மு.50 - சேர்ரோஸ் (cerros) என்ற நகரம் உருவானது. கோவில்கள் மண்டபங்கள் ஆகியவை நிறைந்த நகரம் இது.

கி.பி. 1511 கோன்சலோ குரேரோ என்ற ஸ்பெயின் நாட்டுகாரரின் கப்பல் புயலில் சிக்கி மாயன் பகுதியில் கரை தட்டியது. அவர் அங்கு வாழும் உள்ளூர் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கி.பி. 1517 ஸ்பெயின் நாடு மாயன் மக்கள் மேல் போர் தொடுத்தது. 90 சதவீத மாயன் மக்கள் கொல்லபட்டார்கள். அத்தோடு மாயன் மக்கள் கலாச்சாரம் மறைந்தது.

இவர்கள் சோளத்தை முக்கிய உணவாக பயன்படுத்தினார்கள். கோகோ இவர்களின் முக்கிய பானமாக இருந்திருக்கிறது. மாயன்கள் கடவுள்களை மிக நம்பினார்கள். மொத்தம் 166 கடவுள்கள் இவர்களது வழிபாட்டில் இருந்திருக்கிறது. பிரமாண்டமான கோயில்கள் திருவிழாக்கள் என இருந்த இவர்கள் பலியிடுவதில் விலங்குகள் மட்டுமின்றி கைதிகள், அடிமைகள், குழந்தைகள் என பலியிட்டுள்ளனர். இயற்கையை பற்றி கவலை படாமல் காடுகளை அழித்து விவசாயம் செய்தனர். இதனால் மழை குறைந்து பசி பட்டினி வறட்சி என்ற நிலைமையில், பதினைந்தாம் நூற்றாண்டில் ஸ்பெயினின் படையெடுப்பால் தொண்ணூறு சதவிகிதத்திற்கு மேல் கொல்லப்பட்டனர். சிலர் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள பெரு போன்ற நாடுகளுக்கு ஓடினர் என்று வரலாறு கூறுகிறது..

வாழ்ந்த பிரதேசம்

இவர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் காலத்தின் போக்கு மற்றும் அரசியல் மாற்றங்களால் இன்று மத்திய அமெரிக்காவில் ஐந்து நாடுகளாக இருக்கின்றன .அவை மெக்ஸிகோ,கவுதமாலா ,பெலீஸ் ஹொண்டுரஸ் எல்சல்வடோர் என்பனவாகும் .

நாகரிகத்தின் மைல்கற்கள்


Hieroglyph
  கி.மு 2600 : மாயன் நாகரிகத்தின் ஆரம்பம் மக்கள் வேட்டையை மட்டும் நம்பியிருக்காமல் விவசாயத்திலும் ஈடுபட ஆரம்பித்தனர் .
    கி.மு 700 : Hieroglyph எனும் சித்திர எழுத்து முறையினை மாயன்கள் ஆரம்பித்தனர் .இச் சித்திர எழுத்து முறையானது வாசிக்கும் முறையில் இல்லாமல் படம் வரைந்து விளக்கும் முறையாக இருந்தது .
    கி.மு 400 : இக்காலகட்டத்தில் இவர்களால் நாட்காட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
    கி.மு 300 : மன்னர்கள் ,பிரபுக்கள் ,பூசாரிகள் என ஒவ்வொரு பதவிக்குமான பொறுப்புக்கள்,அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டன .
    கி.மு 100 : Teotihuacan என்ற நகரம் மாயன் மக்களால் உருவாக்கப்பட்டது .இந்த நகரம் இன்றும் இருக்கிறது .கலை,மதம் வர்த்தகம் என்பன இங்கு காணப்பட்டன.
    கி.மு 50 : Cerrors என்ற நகரம் உருவாகியது. இது கோயில்கள் ,மண்டபங்கள் நிறைந்த நகரமாகும்.
    கி.பி 100 : பல உள்நாட்டுக் கலவரங்கள் ஆரம்பமாகின .மாயன் நாகரிகம் முதன்முதலாக சரிவுப் பாதையில் காலெடுத்து வைத்தது .
    கி.பி 900 : மேற்குப் பகுதியில் நகரங்கள் ஒவ்வொன்றாக மறைந்தன.மாயன் நாகரிகம் வீழ்ச்சியின் ஆரம்பம் .

Gonzalo Gurrero

    கி.பி 1511 : கோன்ஷலோ குரேரோ (Gonzalo Gurrero) என்ற ஸ்பானியர் புயலில் சிக்கி மாயன் பகுதியில் இறங்கினார்.
    கி.மு 1517 : ஸ்பெயின் நாடு மாயன் மக்கள் மீது போர்தொடுத்து 90 % மாயன் மக்களைக் கொன்றொழித்தது .அதனால் மக்கள் மாத்திரமின்றி,அவர்களின் கலாச்சாரமும் மறைந்தது.

உணவும் உடையும்



 மாயன் மக்களின் பிரதான உணவாக சோளமும் பிரதான பானமாக கொக்கோவும் இருந்தது .உணவில் உப்பும் முக்கியமாக சேர்க்கப்பட்டது .காய்கறி ,இறைச்சி போன்றவற்றை உப்பில் இட்டுப் பதப்படுத்தினார்கள் .பருத்தி ,கம்பளி ,சணல்,கற்றாழை நார் போன்றவற்றால் நெய்யப்பட்ட உடைகளை அணிந்தனர்.

மத வழிபாடுகள்

மத நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும் மாயன் மக்களிடத்தில் முக்கிய இடத்தை வகித்தன .மழை,காற்று,பிறப்பு ,இறப்பு ஆகாயம் ,கல்வி ,சூரியன் ,சந்திரன் ,அன்பு ,வியாபாரம் ,பாதாள உலகம் என 166 கடவுள்கள் இருந்தன .மிகப்பிரமாண்டமான கோயில்களை கட்டி அடிக்கடி திருவிழாக்களை நடத்தினர் .விலங்குகள் ,கைதிகள்,அடிமைகள் ,குழந்தைகள் என பலிகள் சாதாரணமாக நடந்தன.

 
கலைத்துறை



 மன்னர்களின் அரண்மனைகள் ,கோயில்கள் ,எகிப்திய பிரமிட் போன்ற கட்டடங்கள் கலை நயத்தோடு நிர்மாணிக்கப்பட்டன .மனித உருவங்கள் துல்லியமாக செதுக்கப்பட்டன .மனித சக்தியே கட்டிடங்களை உருவாக்கப் பயன்பட்டது .கருங்கல் ,நீர் கலந்த சுண்ணாம்பு ஆகியவையே கட்டட மூலப்பொருட்களாக விளங்கின .மாயன்கள் அற்புதம் நிறைந்த சிற்பங்களைக் கல்லிலும் மண்ணிலும் உருவாக்கினார்கள் . விதவிதமான மட்பாண்டங்கள் செய்தார்கள். பீங்கான் ,பாத்திரங்கள் ,மரப்பட்டைகள் என்பனவற்றில் கடவுள்கள் ,இயற்கைக்காட்சிகள் ,மிருகங்கள் ,பறவைகள் ,என ஓவியங்களை தீட்டினார்கள் .தங்கத்தில் ஆலய மணிகளையும் கடவுள்களின் வடிவத்தில் முகமூடிகளையும் செய்தார்கள் .மாயன் மக்களின் எழுத்து சித்திர எழுத்தாகும்.இவற்றில் முந்நூறு குறியேடுகள் இருந்ததன .கல்வெட்டுக்கள்,மான்தோல் மற்றும் மர இலைகளால் தயாரிக்கப்பட்ட காகிதம் ஆகியவற்றில் இந்தக் குறியீடுகளைப் பயன்படுத்தி,தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர் .

வானியல் அறிவு

Mayan's space vehicle
 

இம்மக்களின் வானியல் தொடர்பான அறிவு வியக்கத்தக்கது .சூரிய ,சந்திர இயக்கங்களைப் பதவு செய்ய மாயன் மக்கள் வான் ஆய்வுகூடங்களை அமைத்திருந்தனர்.இவற்றில் தொலைநோக்குகள் போன்ற கருவிகளும் இருந்தன .1945க்குப் பின்னர்தான் விஞ்ஞானிகளால் "பால் வீதி "(Milkway )பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது.ஆனால்,அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மாயன் மக்கள் பால்வீதி பற்றி அறிந்திருந்தார்கள்.



நாட்காட்டிகள்


 பல்வேறு நாட்காட்டிகள் பாவனையில் இருந்தன. அதில் ஒரு நாட்காட்டியானது,365 நாட்களைக் கொண்டது. ஆண்டுகளுக்கு 18 மாதங்கள் .ஒவ்வொரு மாதமும் 20 நாட்களை கொண்டிருந்தது.இதனை "ஹாப்" (Haab ) என அழைத்தனர் .இதன்படி,வருடத்தில் 360 நாட்கள் சாதாரண எஞ்சிய 5 நாட்களை அதிஷ்டம் இல்லாத நாட்கள் என்றும் கருதினர் .கி.மு 550 இல் இந்த நாட்காட்டி முறை வந்திருக்கலாம் என கருதப்படுகிறது .மற்றொரு வகை நாட்காட்டியில் மொத்தம் 260 நாட்கள் ஒவ்வொரு ஆண்டும் 13 மாதங்களைக் கொண்டது .மாதமொன்றில் 20 நாட்கள். இதற்கு "ஸோல்கின் "(Tsolkin ) என்று பெயர். இது "புனித நாட்காட்டி "என்று அழைக்கப்பட்டது .மாதமொன்றின் 20 நாட்களுக்கும் 20 கடவுள்களின் பெயரை வைத்திருந்தனர்.

நாகரிகத்தின் வீழ்ச்சி

இரு பிரதான காரணங்கள் மாயன் நாகரிகத்தின் மறைவுக்கு வித்திட்டன .மாயன் மக்கள் தமது இயற்கைச் சூழலைக் காப்பாற்றுவதில் அக்கறை செலுத்தவில்லை .காடுகள் நிறைந்த தமது பகுதிகளில் மரங்களை வெட்டிச் சாய்த்தார்கள் இதனால் மலை குறைந்து வறட்சி ,பஞ்சம் ,பட்டினி ,நோய்கள் என்பன பெருகின .மாயன் சமுதாயம் இவற்றுக்குப் பலியாகின .

அடுத்த காரணம் .15 ஆம் நுற்றாண்டில் படையெடுத்த ஸ்பானியர்கள் 90 % மாயன் மக்களை கொன்றொழித்தனர் .எஞ்சியவர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு தொலைவிலுள்ள பேரு நாட்டுக்கு உயிர் தப்பிச் சென்றனர்.மாயன் மக்கள் அழிந்ததனாலும் சொந்த இடத்தைவிட்டு ஓடியதன் காரணமாகவும் மாயன் நாகரிகமும் கலாச்சாரமும் காலப்போக்கில் மறைநது போயின .



மாயர் எண் முறை
மாயர் எண் முறைமை 20 அடிமான (base-20) எண் முறையை மாயன்கள் பயன்படுத்தினர். மாயன்களின் கணிதத் திறமைக்கு சான்று அவர்களின் பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையாகும். மிக வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் கிரேக்க நாகரிகங்கள் கூட பூஜ்ஜியம் பயன்பாட்டுமுறையை அராபியர்களிடம் இருந்தே அறிந்து கொண்டார்கள். மாயன்கள் எண்களை குறிப்பிட மிக எளிமையான அதே சமயத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட எழுதவல்ல ஒரு குறியீட்டு முறையைக் கையாண்டார்கள். இக்குறியீட்டு முறை ஒரு "_" மாதிரியான கோடு ஒரு புள்ளி ஒரு நீள்வட்டக் குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது.

மாயன் வானியல்

மற்றைய பெரு நாகரிகங்களைப் போல் மாயன்களும் வானியலில் வல்லமை பெற்றிருந்தனர். அவர்கள் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் போன்றவற்றின் சுழற்சி முறைகளை வெகுவாக அவதானித்து ஆவணப்படுத்தியிருந்தனர். சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்கூட்டியே கணக்கீட்டுத் தீர்மனிக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். சடங்குகளில் அதீத நம்பிக்கை பெற்றிருந்த மாயன்கள் வானியல் நிகழ்ச்சிகளை அடியோட்டியே சடங்குகளை நடத்தினர். ட்ரெடெக்ஸ் எனப்படும் மாயன் பஞ்சாங்கக் குறிப்பேட்டிலிருந்து இதற்கான ஆதாரங்கள் பெறப்படுகின்றன.



Stelae
மாயன் நகர பகுதியில் காணப்படும் Stelae எனப்படும் கல் வகையில் இவர்களின் ஆட்சிமுறை, போர்களில் பெற்ற வெற்றி மற்றும் பல முக்கிய தகவல்கள் Heiroglyphik எழுத்துவடிவில் செதுக்கப்பட்டுள்ளது.  மாயன்கள் தூர தேச வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கபட்ட உண்மை.
Bonamak என்ற இடத்தில் அமைந்த  மாயன்களின் சிற்ப கலைகள் எவ்விதப் பாதிப்பும் இன்றி கிடைக்கப் பெற்றதால் ஆராய்ச்சியாளர்கள் இவற்றை முறையாகத் தங்களது ஆய்விற்குப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. இச்சிற்பங்கள்  மாயன்களின் நாகரிக வளர்ச்சியைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன.
மாயாக்கள் பிரமிடுகளின் மேல் கோவிலை அமைத்துள்ளார்கள். பிரமிடுகள் உயரமான மலை பாங்கான இடத்தில் அமைந்திருக்கும் பிரமிடுகளின் மேல் கோவிலை அமைப்பதால் இறைவன் இருக்கும் சொர்க வாசலை அவர்கள் சுலபமாக நெருங்க முடிவதாக நம்பிக்கை கொண்டுள்ளனர்




Itzamna

மாயன்கள் இவ்வுலக ஆரம்பத்தில் Itzamna எனப்பட்ட கடவுளும் கடலும் ஆகாயமும் மட்டுமே இருந்ததாக நம்பினார்கள். Itzamna மனிதர்களை களிமண்ணிலிருந்து தயாரிக்க முயன்றார் ஆனால் அது கைகூடாததால் மரத்திலிருந்து மனித படைத்தார்.ஆனால் மரத்திலிருந்து தயாரிக்கப்பட்டதால் மனிதனுக்கு சிந்திக்கவோ கதைக்கவோ முடியாதிருந்தது. நீண்ட முயற்சியின் பின் Itzam Na நீரையும் சோளத்தையும் பயன்படுத்தி இன்றைய மனிதர்களை படைத்தார் என நம்பினார்கள். மாயர்கள் உலகை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என பிரித்திருந்தனர். மாயர்களின் வானியல் ஒரு மரமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. மரத்தின் மேற்பகுதி சொர்க்கமாகும். அது இறைவனின் வசிப்பிடமாகும். மரத்தின் வேர்ப்பகுதி பாதாள உலகமாகும். சூரியன் இரவில் பாதாள உலகிற்கு சென்று ஓய்வெடுக்கிறான். (மாயர்களின் மொழியில் Xibalba -பாதாள உலகம் , Cab -சொர்க்கம் , Caan - புவி, Yakche – அண்டத்தை குறிக்கும் மரம்.)
Tikal Temple
  சிசேன் இட்ஷா பிரமிட் மாயன்களால், 'குக்கிள்கான்' என்னும் அவர்களுடைய கடவுளுக்காகக் கட்டப்பட்டது. இந்தக் குக்ககிள்கான் என்னும் கடவுள்தான், மாயன்களின் அறிவுக்கே அடிப்படைக் காரணமானவர் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உண்மையில் இந்தக் குக்கிள்கான் ஒரு கடவுள் அல்ல, அவர் கிழக்குப் பக்கத்தில் இருந்து கப்பல் மூலம் மாயன்களிடம் வந்து சேர்ந்த ஒருவர் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். அப்படிக் கிழக்கில் இருந்து வந்தார் என்றால், எங்கிருந்து வந்திருப்பார் என்று பார்த்ததில், அவர்களுக்கு இரண்டே இரண்டு விடைகளே கிடைத்தன. ஒன்று அவர் சுமேரியாவில் இருந்து வந்திருக்கலாம் அல்லது தமிழர்களின் பிரதேசத்தில் இருந்து வந்திருக்கலாம் என்பவையே அவை.




 இந்தக் குக்கிள்கான் என்பவரை பாம்புக் கடவுள் என்று மாயன்கள் வணங்கியிருக்கிறார்கள். பாம்பு என்பது மேற்குலகில் சாத்தானின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட நிலையில், பாம்பைக் கடவுள் அம்சமாகப் பார்க்கும் தன்மை இந்துக்களான நம்மிடம் அதிகம் இருந்ததும், குக்கிள்கான் தமிழ்ப் பிரதேசங்களில் இருந்து வந்திருக்கலாமோ என்னும் வாதத்துக்குப் பலமூட்டுகிறது. இந்தப் பாம்புக் கடவுளான குக்கிள்கானுக்காகவே கட்டப்பட்டது அந்தப் பிரமிட். உலக அதிசயங்களைத் தன்னுள் அடக்கிய ஒரு பிரமிட் அது. மாயன்களின் கணித அறிவையும், வானியல் அறிவையும், கட்டடக்கலை அறிவையும் இன்றும் பறைசாற்றிக் கொண்டு,நிமிர்ந்து நிற்கிறது இந்தப் பிரமிட். இதன் நான்கு பக்கமும், வருடத்தின் நான்கு காலங்களையும், அதில் உள்ள படிகளின் எண்ணிக்கைகள் 365நாட்களையும் குறிப்பது இந்தப் பிரமிட்டின் சிறப்பு. அத்துடன் இந்த நான்கு பக்கமும் உள்ள படிகள் மிகச் சரியாக 45 பாகை கோணத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல், இந்தப் பிரமிட்டின் நான்கு மூலைகளையும் குறுக்காக இணைக்கும் இரண்டு கோடுகளும், மிகச் சரியாக வடக்குத் தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் அமைந்திருக்கின்றன். இவையெல்லாம் மாயன்களின் அறிவுக்கும் கட்டடக் கலைக்கும் முக்கிய சான்றுகளாகும்.

 இவற்றை விடவும் மிக ஆச்சரியமான ஒன்று அந்த பிரமிட்டில் உண்டு. இந்தப் பிரமிட்டின் நான்கு பக்கப் படிகளிலும், வடக்குப் பக்கத்தில் உள்ள படிகளில் ஒரு சிறப்பான அம்சம் அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்தப் படிகளின் அடிப்பக்கம் இரண்டு பக்கமும் இரண்டு பாம்புகள் வாயைத் திறந்து கொண்டிருப்பது போல அமைக்கப்பட்டிருக்கின்றன. வருடத்தில் இரண்டு முறைகள், மிகச் சரியாக மார்ச் 21ம் திகதியும், செப்டம்பர் 22ம் திகதியும் அந்தப் படிகளின் பக்கச் சுவர்களில், சூரியனின் நிழல் படுகின்றது. "அப்படி அந்தச் சூரியனின் நிழலில் என்ன விசேசம்" என்றா கேட்கிறீர்கள்?அதைப் படத்தில் பார்த்தால் உங்களுக்குப் புரியும் பாருங்கள்.




புரிகிறதா? பிரமிட்டின் மூலைகளில் படும் சூரிய ஒளி, அந்தப் பாம்பின் உடல் போல வளைந்து வளைந்து சரியாக அதன் தலையுடன் பொருந்தும். இதில் இன்னுமொரு விசேசம் என்னவென்றால், மாயன்கள் அந்தப் பக்கச் சுவரில் மட்டும் பாம்பின் தோல் போன்ற அமைப்பில் கற்களை வைத்துக் கட்டியிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு வருடமும் சரியாக மார்ச் 21ம் திகதியும், செப்டம்பர் 22ம் திகதியும் மாற்றமே இல்லாமல் இந்த நிழல்கள் தெரியும். "அப்படி என்ன விசேசம் இந்த மார்ச் 21ம் திகதிக்கும், செப்டம்பர்22ம் திகதிக்கும்" என்று யோசிக்கிறீர்களா? உலகில் எந்த ஒரு இடத்திலும், வருடத்தில் எப்போதும், இரவும் பகலும் ஒரே அளவு நேரமாக்க் கொண்டிருப்பது இல்லை. வருடத்தில் இரண்டே இரண்டு நாட்கள் மட்டும்தான் இரவும், பகலும் ஒரே அளவாக இருக்கும். மாயன் பிரதேசத்தில் இந்த இரவும் பகலும் ஒன்றாக இருக்கும் நாட்கள்தான் மார்ச்21ம் திகதியும், செப்டம்பர் 22ம் திகதியும். தற்கால கட்டட நிபுணர்களே தடுமாறும் இந்த ஆச்சரியமான கட்டட அமைப்பைக் கொண்டு அமைந்த இந்தப் பிரமிட்டில், பல அதிசயங்கள் நடக்கின்றன


ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை சிற்றரசர்கள் அவர்களுடைய கடவுளிடம் பேசி ஆலோசனை பெறும் ஒரு சடங்கை நடத்தினார்கள். அவர்களது ஆலயங்களுள் சுவரில் தேவதைகளின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.. Guatemala பகுதியில் சூரிய சந்திர்யளுக்கான கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Chichen ItzaTikal கோயில் , Inscription கோயில் என்பனவும் பிரசித்தமானவை.
Chichen Itza Temple
 

மாயன்களின் எழுத்து வகைகள் நீண்ட நாட்கள் ஆராய்ச்சியாளர்களின் பார்வையில் இருந்தவையாகும். 19-ஆம் நூற்றாண்டில் மாயா நகர பகுதி கண்டுபிடிக்கப்பட்டது 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அவையாவும் புரியாத புதிராகவே இருந்தது.
1960 முதல் 1970 வரையில் அனைத்து எழுத்துக்களுக்கும் அர்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டு படிக்கப்பட்டன. இதன் வழி ‘ஸ்பெயின்’ நாட்டினரின் படையெடுப்பும், பல்லாயிர காணக்கான புத்தகங்கள் எரிக்கப்பட்டதும் வருத்தத்துடன் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களின் 4 புனித நூல்களில் மூன்றும் நான்காம் நூலின் சில பக்கங்களும் மட்டுமே கிடைத்துள்ளது.

மாயர்கள் 20 அடிமான (base-20) எண் முறையை மாயன்கள் பயன்படுத்தினர். மாயன்களின் கணிதத் திறமைக்கு சான்று அவர்களின் பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையாகும். மாயன்கள் எண்களை குறிப்பிட மிக எளிமையான அதே சமயத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட எழுதவல்ல ஒரு குறியீட்டு முறையைக் கையாண்டார்கள். இக்குறியீட்டு முறை ஒரு "_" மாதிரியான கோடு ஒரு புள்ளி ஒரு நீள்வட்டக் குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது.



பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே மாயன்கள் பந்து விளையாடியிருக்கிறார்கள். அதுவும் நாம் இப்போ விளையாடும் கால்பந்தாட்டத்தில் பாவனைக்கு வைத்திருக்கும் பந்து போலப் பெரிய பந்து.
இன்றைய உலகில் பல விளையாட்டுகளில் பந்து பயன்படுத்தப்படுகிறது. மிகப் பிரபலமாக இருக்கும் விளையாட்டுகள் அனைத்துமே, பந்து விளையாட்டுகளாகத்தான் இருக்கின்றன. குறிப்பாக பாஸ்கெட்பால், பேஸ்பால்,உதைபந்தாட்டம், கிரிக்கெட், டென்னிஸ் என அனைத்துமே பந்துகளால் விளையாடப்படும் விளையாட்டுகள்தான். ஆனால், உலகிலேயே மனித இனவரலாற்றிலேயே, விளையாடப்பட்ட முதல் பந்து விளையாட்டு என்றால், அதுமாயன்கள் விளையாடிய பந்து விளையாட்டுத்தான்.




 கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் பந்து விளையாட்டை, மாயன்கள்விளையாடியதாகப் பதிவுகள் உண்டு. அதுவும், அவர்கள் விளையாடிய பந்து இரப்பரினால் (Rubber) செய்யப்பட்டிருந்தது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.மாயன்கள் அந்தக் காலங்களிலேயே ரப்பர் மரங்களில் பாலெடுத்து, பதப்படுத்தி,அதன் மூலமாக உருண்டையாக பந்தைத் தயார் செய்திருக்கின்றனர்.மாயன்கள் வாழ்ந்த இடங்களில் நூற்றுக்கணக்கான ரப்பர் பந்துகளைஅகழ்வாராச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். இப்போதும் அவை விளையாடக் கூடிய தரத்தில் இருக்கின்றன. மாயன்களின் பந்து விளையாட்டு,இப்போது விளையாடப்படும் நவீன விளையாட்டுகள் போலச் சட்டதிட்டங்களும், விதிகளும் உள்ள ஒரு விளையாட்டாகவே விளையாடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அந்தப் பந்து விளையாட்டு,விளையாடப்படும் மைதானத்தின் அமைப்பும் எம்மை ஆச்சரியப் படுத்துகிறது.மிக நேர்த்தியாகவும், அளவு கணக்குகளோடும் அமைக்கப்பட்டிருந்தன விளையாட்டு மைதானங்கள். ஆங்கிலக் காப்பிட்டல் 'I' என்னும் எழுத்தைப்போல அமைந்த மைதானம், அண்ணளவாக 30 மீற்றர் நீளமும், இரண்டு பக்கம்நீளமான சுவர்களையும் கொண்டது.





மாயன்கள் விளையாடிய பந்து விளையாட்டு, தற்போது விளையாடப்படும் உதை பந்தாட்டத்தையும் (Soccer), பாஸ்கெட் பாலையும் (Basket Ball) கலந்தது போல ஒரு விளையாட்டு ஆகும் அல்லது இப்படியும் சொல்லலாம். நாம் விளையாடும் உதை பந்தாட்டமும், பாஸ்கெட் பாலும் மாயன்களிடமிருந்து நாம் பெற்றதாக இருக்கலாம்.







 பந்து விளையாடும் மைதானத்தின் நடுவே, இரண்டு பக்கச் சுவர்களிலும் இரண்டு வளையங்கள் வடிவிலான அமைப்பு உண்டு. விளையாட்டில் பாவிக்கப்படுவது, 25 செ.மீ .அளவுள்ள இரப்பர் பந்து. இந்தப் பந்தைத் தமக்கென இருக்கும் பக்கத்தில் அமைந்திருக்கும் வளையத்தினூடாக அடிப்பதே அந்தப்பந்து விளையாட்டின் வெற்றியைத் தீர்மானிக்கும் விதியாகும்.






 தலா ஒவ்வொரு பக்கமும் ஐந்து விளையாட்டு வீரர்கள் விளையாட்டில் பங்கேற்பார்கள். அவர்கள் பந்தை வளையத்தினூடாக அடிக்கும்போதோ அல்லது விளையாட்டின்போதோ, கால்களையோ கைகளையோ தலையையோ பந்தில் படும்படியாகப் பயன்படுத்த முடியாது.

இடுப்பினாலும், முழங்கால்களினாலும் மட்டுமே பந்தை அடிக்க முடியும். இது எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்குப் புரிகிறதா? ஆனாலும் மாயன்கள் அப்படித்தான் அந்தப் பந்து விளையாட்டை விளையாடி இருக்கின்றனர். தற்காலப் பந்து விளையாட்டின்போது பாவிக்கும் தலைக் கவசத்தைப் போல,விதவிதமான தலைக் கவசங்களையும் இந்த விளையாட்டின் போது,மாயன்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.





 மாயன்கள் விளையாடிய பந்து விளையாட்டை, 'பிட்ஷி' (Pitzi) என்று அழைக்கின்றனர். இந்த விளையாட்டின் போது, இரு பக்கமும் விளையாடும் ஐந்து விளையாட்டு வீரர்களுக்கு ஒருவர் அணியின் தலைவராக இருக்கின்றார். இப்போதுள்ள 'கப்டன்' (Captain) போல. எந்த அணி தோற்கின்றதோ, அந்தஅணியின் தலைவர் பூசை, புனஸ்காரங்களின் பின்னர் அலங்கரிக்கப்பட்டு மகிழ்ச்சியுடனும், ஆரவாரத்துடனும் தலை வெட்டப்படுகிறார். ஆனால் மாயன்களுக்கு இந்தப் பந்து விளையாட்டு, ஒரு பொழுதுபோக்கான விளையாட்டு என்பதோடு நின்றுவிடவில்லை. அதையும் தாண்டிப் புனிதமானது இது. அந்தப் பந்து விளையாட்டுமொத்தமுமே ஒரு தத்துவத்தை வெளிப்படுத்துகிறது என்பதே அவர்கள் நிலைப்பாடு.
பொபோல் வூ' (Popol Vuh) சொல்லும் கதையைச் சொல்ல வேண்டும். 'பொபோல் வூ' என்னும் நூல் சொல்லும் கதையில் பூமி, சூரியன், சூரியக்குடும்பம், பால்வெளி மண்டலம் என்று அனைத்தைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது, அத்தோடு பால்வெளி மண்டலத்தில் இருக்கும் கருமையானஇடம் (Dark Rift) பற்றியும் சொல்லியிருக்கிறது. அந்தக் கருமை இடத்துக்கு அருகே சூரியன் சென்றால், சூரியனும், உலகமும் அழிந்து விடும் என்றும் சொல்லியிருக்கிறது. தாங்கள் விளையாடிய பந்து விளையாட்டுடன் இவற்றை எல்லாம் சம்பந்தப்படுத்தி இருந்தார்கள் மாயன்கள்.

மாயன் நம்பிக்கைகள்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம் என்பதற்கேற்ப மாயன்கள் பல்வேறு மத சடங்குகளையும் நம்பிக்கைகளையும் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை சிற்றரசர்கள் அவர்களுடைய கடவுளிடம் பேசி ஆலோசனை பெறும் ஒரு சடங்கை நடத்துவர்.

இலக்கியம்/நூல்கள்



 ஹைரோகிளிப்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பட எழுத்து முறையை மாயன்கள் பயன்படுத்தினர். கல்வெட்டுக்கள் சிற்பங்கள் போன்றவற்றில் எழுதியது மட்டுமில்லாமல், ஒருவகையான புத்தகம் தயாரிக்கும் முறையையும் அவர்கள் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு பல புத்தகங்களை அவர்கள் எழுதியிருக்கலாம் எனக் கருதப் படுகிறது. ஸ்பானிய ஏகாதிபத்தியத்துடன் வந்த அடிப்படைவாத கிருத்துவர்கள் பல மாயன் நூல்களை அழித்துவிட்டார்கள். இதில் தப்பியவை நான்கே நான்கு நூல்கள் தாம்.

வீழ்ச்சி

இவ்வளவு வளமையாக ஓங்கி செழித்து வளர்ந்த நாகரிகம் ஏறக்குறைய புல், பூண்டு இல்லாமல் போய்விட்டது. அதற்கான காரணத்தை அறிஞர்கள் இன்னும் அறுதியிட்டுக் கூறவில்லை. இவையாக இருக்கலாம் எனக் கருதப்படும் சிலவற்றில் முக்கியமானது, அண்டை நாடுகளுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட பங்காளிச் சண்டைகள், காடுகளை அழித்து அவர்கள் நடத்திய விவசாயம் வெகு காலம் தாக்குப் பிடிக்கவில்லை, ஸ்பானிய குடியேற்றங்களுடன் வந்த அம்மை மற்றும் காலரா போன்ற வியாதிகள் பெருவாரியான மாயன்களை மிகக் குறுகிய காலத்தில் அழித்திருக்கலாம். ஆனால் இவையெல்லாம் தாண்டி சுமார் 6 இலட்சம் மாயன்கள் தற்காலத்திலும் மெக்ஸிகோ, குவதிமாலா போன்ற நாடுகளில் வசிக்கிறார்கள்.

1 comment:

  1. super boss...and researchers told that mayans had connection with Aliens,,and their god KUKILKAN may be came from TAMILNADU,,,ravi

    ReplyDelete