Powered By Blogger

Sunday, October 23, 2016

இஸ்ரேலும் மொஸாட்டும்

  அமெரிக்கா , இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகளினதும் தற்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் கடந்தகால அரசியல் நடவடிக்கைகள் என்பனவற்றை அலசுவதே இத் தொடரின் நோக்கமாகும் . இந் நாடுகளின் அரசியலைத் தீர்மானிப்பதே அவற்றின் உளவுத்துறைகள்  தான் என்பதால் குறித்த நாடுகளின் உளவுத்துறைகள் சம்பந்தமான விவகாரங்களையும்  இத் தொடர் உள்வாங்கிக் கொள்கிறது .

   நீண்ட கால அடிப்படையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா என்பன ஒரே பொது நோக்கிலேயே செயற்படுகின்ற போதிலும் தற்கால சூழலில் பொருளாதார நெருக்கடி , மற்றும் சீனாவின்  அதி வேக  பொருளாதார வளர்ச்சி என்பவற்றின்  பின்னணியில்  அமெரிக்க - இஸ்ரேலிய  நலன்கள் வேறுபட்டுள்ளன .   அதை  ஈரானும்  வகையாகப் பயன்படுத்திக்  கொண்டிருக்கிறது .  அதுவே  தற்போதைய  மத்திய கிழக்கு யுத்தப்  பதற்றத்துக்கும்  காரணமாக  அமைந்துள்ளது .  






 1953  இல்  ஈரானிய  மன்னரான  முகமது  மொசாதே  தனது  நாட்டின்
எண்ணைத்  தொழிலை தேசிய மயமாக்கினார் அப்போதே அமெரிக்காவுக்கு மூக்கு வியர்த்து விட்டது அதன்  பின்  CIA  இனால்  இரகசியமாக முன்னெடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையினால் மன்னர் மொசாதே முன்னாள் மன்னரானார் இதன் பின்  அமெரிக்கா - ஈரானுக்கிடையே மிக நெருக்கமான உறவு இருந்து வந்தது எல்லாம் கொஞ்ச காலம் தான் .அதன் பின் 1979 இல் முன்னெடுக்கப்பட்ட ஈரானியப் புரட்சி மூலம் முடியாட்சி முறை தூக்கி எறியப்பட்டு இஸ்லாமியக் குடியரசு ஆனது .  அதன்பின் ஈரானிய - அமெரிக்க உறவுகள் சீர்குலைந்தன . 1980 - 1988 வரை ஈராக்குடன் ஒரு முடிவுறாத இரத்தம் தோய்ந்த போரை நிகழ்த்தியது ஈரான் .இதன் போது அமெரிக்கா ;  ஈராக் இற்கு ஆதரவளித்து வந்தது அப்போதைய ஈராக் ஜனாதிபதி  சதாம் உசேன் !!
                                ஈரான் - ஈராக் யுத்தத்தின் போது

இறுதியில்  அந்தப் போர் persian வளைகுடா வரை விரிவடைந்து 1987 மற்றும் 1988இல் அமெரிக்க கடற்படைக்கும் ஈரானிய இராணுவத்துக்கும் இடையேயான மோதல்களுக்கு வழிவகுத்தது .  

இன்று உலகில் 18 ஆவது பெரிய நாடான , 2 ஆவது பெரிய எண்ணை 
வளமுள்ள நாடான , ஏழரை கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஈரான் 


இஸ்ரேல்; ஈரானை எவ் வழிகளில் தாக்கலாம் ? அதற்கு இரண்டு வழிகள் உள்ளன .
 1) ஏவுகணைகள் மூலம் தாக்கலாம் . 
 2) விமானங்கள் மூலம் தாக்கலாம் .
 ஏவுகணைகள் மூலம் ஈரானிய இலக்குகளைத் தாக்க முடியுமாயினும், மிக மிகப் பாதுகாப்பாக நிலத்தின் அடியில் அமைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான ஈரானிய அணு உலைகளை, அணு ஆராய்ச்சி மையங்களை ஏவுகணைகளால் தாக்கி அழிக்க முடியாது . ஏவுகணைகள் மூலம் நிலத்தின் மேலுள்ள இலக்குகளையே துல்லியமாகத் தாக்கி அழிக்க முடியும்   ஆக, நிலத்தின் கீழ் அமைந்துள்ள இலக்கைத் தாக்க வேண்டுமானால் விமானத்திலிருந்து ஏவப்படும் ' ARMOR-PIERCING ' ரக குண்டுகளையே பயன்படுத்த வேண்டும் .


  
  ஒரேயொரு தெரிவாக இருக்கப் போவது; விமானங்கள் மூலம் தாக்குவது தான் . 
     விமானங்கள் மூலம் தாக்குவதென்றால் ஈரானிய எல்லைக்குள் ஒரே சமயத்தில் பெருமளவு விமானங்களை ( குண்டுவீச்சு விமானங்கள் + யுத்த விமானங்கள் ) அனுப்ப வேண்டியிருக்கும் . அதற்கு முதல் எத்தனை தாக்குதல் இலக்குகள் என்று தெரிந்தாக வேண்டும் 

                          வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட ஈரானிய அணுசக்தி நிலையங்கள்  
   
   மேலுள்ள படத்தின்படி 9 இடங்களில் ஈரானிய அணுசக்தி நிலையங்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . இவை தவிர மேலும் சில ரகசிய அணு சக்தி நிலையங்களையும் ஈரான் பராமரித்து வருகின்றது. இவ் ரகசிய நிலையங்களில் fordo பகுதியில் அமைந்துள்ள யுரேனியம் செறிவூட்டும் நிலையம் தொடர்பான தகவல்கள் வெளியாகி இருந்தன   இவ் அணு சக்தி நிலையங்களில் பெரும்பாலானவற்றில் மின் உற்பத்தி நடைபெறுகின்ற போதிலும் அதனுடன் இணைந்த வகையில் யுரேனிய சுத்திகரிப்பு , யுரேனிய செறிவூட்டல் போன்ற பணிகளும் நடைபெறுவதால் அவையும் நிச்சயமாக இஸ்ரேலிய தாக்குதல் இலக்கில் இடம்பெறும் . ஆக , குறைந்தது 8 இலக்குகளாவது தெரிவுசெய்யப்படும்; அவை ஒவ்வொன்றிற்கும் தலா 5 விமானங்களை என்றாலும் [ 3 குண்டுவீச்சு + 2 யுத்த விமானம் ] அனுப்ப வேண்டியிருக்கும் .  குறைந்தது 40 விமானங்கள்  
     
                                                                                   ஈரான் ஜனாதிபதி அகமதி நிஜாத் 

        அங்கேதான் பிரச்சனையே இருக்கிறது . சுமார் 1500 km தூரம் பறந்து வரவேண்டும் அணு உலையை நெருங்குவதற்கு அதுவும் ஈரானிய எல்லைக்குள் சுமார் 500-850 km என்றாலும் பறக்க வேண்டி இருக்கும் .


     ஈரானிடம் s-300 ரக ரஷ்யத் தயாரிப்பு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் கைவசம் உள்ளன . விமான எதிர்ப்பு ஏவுகணைகளில் அமெரிக்க ஏவுகணைகளை விடவும் s-300 ரக ஏவுகணைகளே கூடியளவு துல்லியமாக செயற்படுவதாக ராணுவ வட்டாரங்களில் ஒரு கதையுண்டு 

                                                   s-300 ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் 
  
 இந்த s-300 ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை தற்போது ஈரானுக்கு விற்பனை செய்வதற்கு ஐ.நா சபை தடைவிதித்துள்ளது . எது எப்படியோஈரானிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் நல்ல நிலையிலேயே உள்ளன என்பதற்கு சான்று அண்மையில் 2011 ஜூலையிலும் , டிசம்பர் 4 ந் தேதியும் ஈரானினால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க உளவு விமானங்கள் !! 

                                      டிசம்பர் 4 ந் தேதி வீழ்த்தப்பட்ட அமெரிக்க உளவு விமானம் 
    
   
1964 விமானங்களை கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கு விமான எண்ணிக்கை இழப்பு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாதாயினும் இஸ்ரேல் விமானிகள் உயிருடன் பிடிபட்டால் இஸ்ரேலின் நிலைமை நகைப்புக்கிடமானதாகி விடுவதோடு அது முழுமையான இஸ்ரேல் - ஈரான் போருக்கும் வழிசமைத்து அமெரிக்காவுக்கும் பிரசரை எகிறவைத்துவிடும்

இஸ்ரேலிய விமானங்களால் பாதுகாப்பாகச் சென்று ஈரானிய அணு உலைகளைத் தாக்குவதற்கு ஒரு வழி உண்டு
     
         தொழில்நுட்பத்தின் மூலம் ஈரானைக் குழப்புவது ! அதாவது ஈரானிய ரார்களின் ரார் சமிக்ஞைகளைக் குழப்புவதன் மூலம் எந்தவொரு விமானமும் பறக்கவில்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடுதல் . இவ்வாறு குழப்புவதன் மூலம் விமானங்களால் ஈரானிய ஏவுகணைகளின் கண்களிலும் மண்ணைத் தூவி
விடலாம் . எனக்குத் தெரிந்தவரையில் அநேகமான விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ரார் மூலம் விமானத்தை 'lock' செய்த பின்பே இயக்கப்பட முடியும் . ஆகவே ராரில் இருந்து விமானத்தை மறைத்துவிட்டால் விமான எதிர்ப்பு ஏவுகணைகளால் தாக்க முடியாது ஆனாலும் இந்த வழியிலும் ஒரு சிக்கல் இருக்கத்தான் செய்கிறது.
         வெவ்வேறு நாடுகள் வேறுபட்ட வகைகளில் ரார்களைச் செய்கின்றன. தொழில்நுட்பத்தின் மூலம் ஒருசில வகை ராடர்களை மட்டுமே ஒரே சமயத்தில் ஏமாற்றக்கூடியதாக இருக்கும் . அமெரிக்காவின் F-117 ரக விமானத்தின் மூலம் அனைத்து வகை ரார்களையும் ஏமாற்ற முடியும். இந்த விமானம் தனது உடல் வடிவத்தின் மூலமே ராடர்களை ஏமாற்றுகிறது .
                                                     F-117 ரக குண்டுவீச்சு விமானம்        


    ஆகவே ஈரான் பல்வேறு நாடுகளிடமிருந்தும் ராடர்களைப் பெற்று கலவையாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் அவை அனைத்தையும் ஒரே சமயத்தில் ஏமாற்ற முடியாமல் போகலாம் . அவ்வாறு நிகழ்ந்தால் இஸ்ரேலிய விமானங்களின் கதி அதோ கதி ஆகி விடும் !
                                                                                 3-D ரார் 
               ராடர் செயற்படும் முறை  

        
        ஆகவே ஈரான் மீதான தாக்குதல் திட்டமிடப்படுவதற்கு முன்னர் ஈரானிடம் உள்ள சகல விதமான ஆயுத தளபாடங்கள்மற்றும் ராடர்கள் போன்ற தொழில்நுட்ப சாதனங்கள் தொடர்பான முழுமையான உளவுத் தகவல்கள் திரட்டப்பட வேண்டும். தற்போது ஈரான் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலின் தயாரிப்பு வேலைகள் பூர்த்தியடைந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்திருப்பதால், நிச்சயமாக இது சம்பந்தமான உளவுத் தகவல்கள் திரட்டப்பட்டிருக்கும்.



 மொஸாட் ( Mossad ) என்ற பெயரைக் கேட்டாலே இஸ்ரேலைச் சுற்றியிருக்கும் அரேபிய நாட்டு மக்களுக்கு ஒருவித பயமும் வெறுப்பும் ஏற்படும். 2 ம் உலகப் போருக்குப் பின், ஐக்கிய நாடுகள் அவையின் முடிவின் படி{ அமெரிக்கவின் முடிவின் படி } இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. உலகின் பல நாடுகளில் சிதறிக் கிடந்த யூதர்களுக்கு அவர்களது பழைய தாய் நாட்டை மீட்டுக் கொடுக்கத்தான் அந்த முடிவு எடுக்கப்பட்டது. அரேபியர்கள், எகிப்தியர்கள் ஆகியோர் வசமிருந்து பல நிலப்பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு இஸ்ரேல் உருவானது. உலகின் பல நாடுகளிலிருந்தும் யூதர்கள் பல்லாயிரக் கணக்கில் கிளம்பிவந்து இஸ்ரேலில் குடியேறினர். ஆனால் உருவாக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே இஸ்ரேலுக்கு அமைதி கிட்டவில்லை. அரேபியர்களின் வெறுப்பும், விரோதமும் கடுமையாக இருந்தது. ஆகவே தொடர்ந்து தனி நாடாக இருப்பதற்காகவும், தனது சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் இஸ்ரேல் எப்போதும் ஒரு போருக்கான ஆயத்த நிலையிலேயே இருக்க வேண்டியிருந்தது. இன்று வரையும் அந் நிலை தொடருகின்றது.

  இஸ்ரேல் உருவாக்கப்படுவதற்கு முன்பே சிறு சிறு குழுக்கள் யூத அமைப்புகளுக்காக உளவு வேலையில் ஈடுபட்டு வந்தன. நாடு ஏற்படுத்தப்பட்ட பிறகு அத்தகைய சிறு குழுக்களால் ஒரு நவீன அறிவியல் பின்னணியில் இயங்கி வரும் பிற நாட்டு உளவு நிறுவனங்களுடன் போட்டி போட்டு இயங்க இயலவில்லை. ஆகவே உள்நாட்டிலும், அயலிலுள்ள அரபு நாடுகளிலும் இயங்கிவந்த உளவு நிறுவனங்களை முறியடிக்க ஒரு வலுவான அமைப்பு இஸ்ரேலுக்குத் தேவைப்பட்டது. அரபு நாடுகள் எந்நேரமும் இஸ்ரேலைக் கைப்பற்ற சதி வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டேயிருந்தன.

         1948 யூன் மாதத்தில் அன்றைய இஸ்ரேல் பிரதமர் பென்-குரியோன்{David Ben-Gurion }  ஒரு வலுவான உளவு நிறுவனத்தை அமைக்க உத்தரவிட்டார். அந்த நிறுவனம் மூன்று பகுதிகளைத் தன்னுள் அடக்கியிருந்தது. முதல் பகுதிக்கு Bureau of Military Intelligence என்று பெயர். இரண்டாவது பகுதி Political Department of Foreign Affairs என்றழைக்கப்பட்டது. இது வெளிநாட்டு உளவுச் செய்திகளை அறிந்து கொள்வதற்கான பகுதியாகும். மூன்றாவது பகுதி Department of Security என்பதாகும். ஆரம்ப கால கட்டத்தில் இந்த உளவு நிறுவனம் தடுமாறியது. அந்தக் காலகட்ட நவீன கருவிகளோ, வசதிகளோ தன்னிடம் இல்லாததால் திணறியது.

           1951 செப்டெம்பரில் இந்த உளவு நிறுவனம் மாற்றியமைக்கப்பட்டு 'மொஸாட்' என்ற புதுப்பெயர் இடப்பட்டது. பிற நாடுகளில் உளவு பார்ப்பதையும், உள்நாட்டில்; வெளிநாட்டு உளவாளிகள் நுழைந்து விடாமல் கண்காணிப்பதையும் வேறு சில சிறப்பு அலுவல்களையும் மொஸாட் ஏற்று செய்யத் தொடங்கியது. மொஸாட்டின் தலைவர் அந்நாட்டு பிரதமருக்கு மட்டுமே கட்டுப்பட்டவர். தனது நடவடிக்கை விபரங்களைப் பிரதமருக்கு மட்டுமே அவர் எடுத்துரைப்பார்.

         யூதர்களைப் பொறுத்தமட்டில் மொஸாட் என்கிற பெயர் அவர்களின் பழைய நினைவுகளைக் கிளறக்கூடியது. 1930 -1947 இற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் பல்லாயிரக் கணக்கில் பிற நாடுகளிலிருந்து யூதர்களை இஸ்ரேலுக்குள் கொண்டுவரும் பணியை இதே பெயருள்ள மற்றொரு இயக்கம் மேற்கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றியது. அதன் ஞாபகார்த்தமாகத்தான் 1951 இல் மொஸாட் என்ற பெயர் இந்த உளவு நிறுவனத்துக்கு வைக்கப்பட்டது.

      ஆரம்ப கட்டத்திலிருந்த மொஸாட்டுக்கு சாதகமாக 2 விஷயங்கள் இருந்தன. முதலாவது, அனேகமாக எல்லா நாடுகளிலும் இஸ்ரேலுக்குத் திரும்பாத கணிசமான யூதர்கள் வசித்து வந்தனர். அவர்களிடமிருந்து பலவிதமான உதவிகளை மொஸாட் பெற்றது. அத்துடன் அந் நாடுகளில் மொஸாட்டின் உளவாளிகள் மறைந்து தங்கியிருந்து உளவு வேலைகளில் ஈடுபடுவது எளிதாக இருந்தது. அடுத்தது, இஸ்ரேல் உருவாக்கப்பட்டதிலிருந்தே அண்டை நாடுகளுடன் தொடர்ந்து போரிட வேண்டிய நிலையிலேயே இருந்தது. இதனால் மொஸாட்டின் நடவடிக்கைகள் ஒரு போர்க் கால அடிப்படையிலேயே அமைந்திருந்தது. இதனால் அதன் உளவாளிகள் சோர்ந்துவிட வழியே இல்லைஅத்துடன் அமைதிக்கால நியாயங்கள், தர்மங்கள், சட்டங்கள் ஆகியவை இல்லாததால் மொஸாட் அத்தகைய நியதிகளுக்குக் கட்டுப்பட வேண்டியதில்லை.

        இந்த உலகத்திலுள்ள உளவுத்துறைகளுள் கொலைகளைச் செய்வதற்கு சட்டரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ள ஒரேயொரு உளவுத்துறை மொஸாட் தான். இதற்கென்று ஒரு பிரிவையே மொஸாட் வைத்திருக்கின்றது. தனது தேசத்தின் பாது காப்புக்கு எதிரானவர் என்று யாரையேனும் மொஸாட் உளவாளி சந்தேகப் பட்டால் அவரை அலேக்காகப் போட்டுத்தள்ளி விடலாம். அப்புறம் ஆறுதலாக ஒரு அறிக்கை சமர்ப்பித்து விட்டால் போதும், Game Over. ஆரம்பத்தில் இந்தப் பிரிவு அரசியல் கொலைகளைச் செய்வதற்கே பயன்பட்டு வந்தது. தற்போது, ஈரானில் அணு விஞ்ஞானிகளைப் போட்டுத்தள்ளப் பயன்பட்டு வருகின்றது.
       மொஸாட்டின் முதல் தலைவராக இருந்தவர் ரூவென் ஷிலோக் {Reuven Shiloah }. இவர் அரசின் பாதுகாப்புத்துறைத் தலைவர் பதவியையும் வகித்தார். ஆரம்ப ஆண்டுகளில் அமெரிக்காவின் C.I.A ; மொஸாட் உளவாளிகளுக்குப் பயிற்சியளித்தது. விரைவிலேயே உலகத்தரம் வாய்ந்த உளவு நிறுவனமாக மொஸாட் வளர்ந்தது. அது, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உளவு அமைப்புகளின் செயற்பாடுகளைப் பின்பற்றியது. அதன் உளவாளிகள் தற்கால நவீன உபகரணங்கள், தொழில்நுட்பங்கள் அனைத்தையும் கரைத்துக்(?) குடித்தவர்கள்.வதந்திகளை உலக நாடுகளிடையே பரப்புவதிலும் வல்லவர்கள்.

       ஜெர்மனியின் மியூனிக் நகரில் 1972 இல் நிகழ்ந்த ஒலிம்பிக் போட்டியில் இஸ்ரேலிய வீரர்களை பணயக் கைதிகளாகப் பிடித்துக் கொலை செய்தார்கள் பலஸ்தீனப் போராளிகள்.{பலஸ்தீனப் போராளிகள் இஸ்ரேலிய சிறையிலிருக்கும் தமது சகாக்களை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்தார்கள். இஸ்ரேல் அதை நிராகரித்துவிட்டது} இது மொஸாட்டின் தோல்வியாகவே கருதப்பட்டது. வீரர்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று மொஸாட்டின் மீது காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதிலிருந்து பாடம் படித்த மொஸாட்; 1987 இல் இஸ்ரேல் டென்னிஸ் வீரர்கள் 'டேவிஸ் கப்' போட்டியில் விளையாட இந்தியா வந்தபோது கூடவே தனது உளவாளிகளையும் கலந்து அனுப்பியிருந்தது.
இவர்கள் தான் 1972 ஒலிம்பிக்கில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் 

         உலக மக்களை வியக்க வைத்த பல வீர தீரச் சாகசச் செயல்களைக் கனகச்சிதமாக முடித்துக் காட்டுவதிலும் இவர்கள் வல்லவர்கள். உதாரணமாக 1973 இல் 'பெய்ரூட்' நகரில் தலைவர்களை அழித்தது, மற்றும் 1976 இல் உகண்டா நாட்டில் "என்டெப்" விமான நிலையத்தில் கடத்தப்பட்ட  விமானத்தையும், அதில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த பல இஸ்ரேலியர்களையும் இரவோடிரவாகப் பத்திரமாக மீட்டு இஸ்ரேலுக்குக் கொண்டுவந்தமை போன்றவை ஹாலிவுட் படங்களையே மிஞ்சிய சாகசங்கள்.
இது தான் கடத்தப்பட்ட விமானம்
அர்ஜென்டினா நாட்டில் மறைந்து வாழ்ந்து வந்த நாஜி வெறியனான அடால்ப் ஜக்மான் என்பவனை இஸ்ரேலுக்கு வெற்றிகரமாகக் கடத்திவந்து அவன் மீது விசாரணை நடத்தி மரண தண்டனையும் வழங்கியமை 1969 இல் எகிப்தில் பணியாற்றி வந்த 5 நாஜி ஆதரவாளர்களான விஞ்ஞானிகளைக் கண்டுபிடித்துக் கொன்றமை என்று உலகம் முழுக்கவும் மொஸாட்டின் அதிரடிகள் அரங்கேறியுள்ளது.
     ஒரு சில தோல்விகளையும் மொஸாட் தாங்கிக் கொள்ள நேர்ந்தது. 1967 இல் கெய்ரோவிலும், அலெக்ஸான்டிரியாவிலும் இருந்த இங்கிலாந்து, அமெரிக்க நாட்டு அதிகாரிகளின் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தி, அந்தப் பழியை எகிப்தியர்கள் மீது போடுவதற்குத் திட்டமிட்டது மொஸாட். இதன் மூலம் எகிப்து அதிபர் நாசர் மீது மேற்குலக நாடுகள் வெறுப்புக் கொள்ளும் என இஸ்ரேல் எதிர்பார்த்தது. ஆனால் திட்டம் தோல்வியடைந்து உளவாளிகள் மாட்டிக்கொண்டனர். இருவருக்குத் தூக்குத் தண்டனையும், 6 பேருக்கு நீண்ட கால சிறைத் தண்டனையும் வழங்கியது, எகிப்திய அரசு. பின்னாளில் எகிப்துக்கும் இஸ்ரேலிய ராணுவத்துக்கும் நடந்த ஆறு நாள் யுத்தத்துக்குப் பின், அந்த ஆறு உளவாளிகளையும் எகிப்தியப் போர்க் கைதிகளுக்குப் பதிலாக மாற்றிக் கொண்டது இஸ்ரேல்.
     மொஸாட்டின் மிகப்பெரிய தோல்வியாகக் கருதப்படுவது, 1975 இல் எகிப்தும் சிரியாவும் கூட்டாக இஸ்ரேல் மீது எதிர்பாராத தாக்குதல் நடத்தியது தான் !! 'ஜாம் கிப்பர் யுத்தம்' என்று அழைக்கப்படும் இந்தத் தாக்குதலை மொஸாட் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.ஆனாலும் கூட இந்த யுத்தத்தையும் வெற்றி கொள்வதற்கு மொஸாட் பெரும் பங்காற்றியிருந்தது. இந்த எதிர் பாராத தாக்குதலால் மொஸாட்டின் செல்வாக்கு பெருமளவில் மங்கினாலும் பின்னர், 1976 உகண்டா விமான நிலையச் சாதனைக்குப் பிறகு,அதன் செல்வாக்கு மீண்டும் அதிகரித்தது.
ஆக மொத்தத்தில், இஸ்ரேலியர்களைப் பொறுத்தவரை மொஸாட் காவல் தெய்வம். மற்றவர்களைப் பொறுத்தவரை அழிக்கும் தெய்வம்.

No comments:

Post a Comment