Powered By Blogger

Monday, June 15, 2015

Keyboard


10 வருடங்களாக கணினியில் ரைப்செய்பவர்கள் கூட இரண்டு விரல் நுனிகளைக்கொண்டோ அல்லது ஒரு விரல் நுனியினைக்கொண்டோ ரைப்செய்யும் அவலம் இன்றும் உள்ளது. ஆனால் நான்கு மணி நேரங்களில் நிமிடத்துக்கு 40 சொற்கள் என்ற வேகத்தில் எந்த ஒருவராலும் தமிழிலோ ஆங்கிலத்திலோ ரைப் செய்ய முடியும் என்பதே உண்மை.
.
ரைப்பிங் செய்வது என்பது ஒரு இயல்பாக்கல் செயற்பாடு. மூளையுடன் தொடர்பற்றது. அதாவது ரைப் செய்யும்போது எந்த "கீ" எங்கு உள்ளது என்ற சிந்தனையோ அல்லது எந்த "கீ" இற்கு எந்த விரல் என்ற சிந்தையோ எழக்கூடாது. எனவே ரைப்பிங் செய்யும்போது அது தொடர்பாக மூளையின் செயற்பாட்டினை தடைசெய்வதே வேகமாக ரைப்பிங் செய்வதற்கான ஒரே வழி
.
செய்யவேண்டியதெல்லாம் இவ்வளவுதான்.
.
1. படத்தில் காட்டப்பட்டுள்ளதுபோன்று ஒவ்வொரு "கீ" இற்கும் குறிப்பிட்ட விரலை மட்டும் பயன்படுத்த வேண்டும். (எக்காரணம்கொண்டும் விரல்களை மாறி பயன்படுத்த கூடாது)
.
2. பயிற்சியின்போது ரைப் செய்யும்போது கணினி திரையை பார்க்க கூடாது (மூளையின் தொடர்பை நிறுத்த)
.
3. பயிற்சியின்போது ரைப் செய்யும்போது கீபோட்டை பார்க்க கூடாது (மூளையின் தொடர்பை நிறுத்த)
.
4. பயிற்சியின்போது ரைப் செய்யும்பொது விடும் தவறுகளை திருத்தக்கூடாது. (மூளையின் தொடர்பை நிறுத்த)
.
5. காலையும் மாலையும் அரை மணிநேரம் வீதம் நான்கு நாட்கள் பயிற்சிசெய்தால் போதும். தமிழோ ஆங்கிலமோ நிமிடத்துக்கு 40 சொற்கள் என்ற வேகத்தில் ரைப் செய்ய முடியும்.
.
குறிப்பு : வேகமாக ரைப் செய்பவர் ஒருவரிடம் "S" அல்லது ஏதாவதொரு எழுத்தை சொல்லி அது எங்கே இருக்கிறது என்று கேட்டு பாருங்கள் அதை சொல்வதற்கு நிறைய நேரம் எடுக்கும். ஆனால் அதற்குள் அவர் 100 எழுத்துக்களை ரைப் செய்துவிடுவார். காரணம் வேகமாக ரைப் செய்பவர்கள் மூளையை பயன்படுத்துவதில்லை. கையில் ஏற்படுத்திக்கொண்ட இயல்பாக்கத்தின் மூலமே ரைப் செய்வார்கள்.
.
ஆங்கிலம் கதைப்பதும் இதேபோன்றுதான். வசன உருவாக்கம் தொடர்பாக மூளையினை பயன்படுத்தி ஒரு சிறிய இலக்கண சிந்தை இருந்தால்கூட ஆங்கிலத்தினை கதைக்க முடியாது. வாயிலே சொல்லப்படும் வசனங்கள் அமைப்பு ரீதியாக இயல்பாக்கப்படுவதன் மூலமாக மட்டுமே கதைக்க முடியும்.

No comments:

Post a Comment