Powered By Blogger

Tuesday, January 20, 2015

மைக்கேல் ஜாக்சன் ஒரு வாழும் வரலாறு.......



மைக்கேல் ஜாக்ஸன் திடீர் அறிவிப்பொன்றை வெளியிட்டபோது சர்வ இசைலோகமும் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப்போனது. 12 வருடங்கள் கழித்து மீண்டும் மேடையில் லைவாக ஜாக்ஸன் என்று நினைக்கும்போதே ரசிகர்களுக்கு மயிர் கூச்செறிந்தது. 8 லட்சம் டிக்கெட்டுகளும் ஐந்து மணி நேரத்தில் சுடச்சுட விற்றுப்போயின. இத்தனைக்கும் ஒரு டிக்கெட்டின் விலை 5000 ரூபாய்

முதலில் ஏஓஎல் இணையத்தளத்தில்தான் மைக்கேல் ஜாக்ஸனின் மரணச் செய்தி வெளியிடப்பட்டது. சமீபகாலமாகவே நிறைய பெயின் கில்லர்களை உட்கொண்டு நடனப் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். லண்டன் நிகழ்ச்சிக்காக விடாது ரிகர்ஸல் செய்ததில் உடல், மேலும் அவரைப் படுத்திக்கொண்டிருந்தது. உடல் முழுக்க விதவிதமான நோய்கள், குறைபாடுகள். அத்தனையும் சேர்த்து 26ம் தேதி அவர் மூச்சை நிறுத்தியது. வழக்கம்போல மற்றோரு வதந்தி என்று அரை நம்பிக்கையில் இருந்த ஜாக்ஸன் ரசிகர்கள் சர்வதேச பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் அந்த துக்கச் செய்தி உறுதி செய்யப்பட்டவுடன் நொடிந்துபோனார்கள். மைக்கேல் ஜாக்ஸனுக்கு முன்னால் மரணமடைந்த பாப் மாமேதை எல்விஸ் பிரிஸ்லி போலவே இளம்வயதில் மரணம் (வெளிநாட்டில் 50 வயது என்பது மிடில் ஏஜ்). எல்விஸ் போலவே உருவ மாற்றத்திலும் தீராப்பிணியிலும் சிக்குண்டு தடாலடியாக ஒருநாளில் மரணம். ரசிகர்கள் கதறியழுகை.

இருபதாம் நூற்றாண்டின் மகத்தான் கலைஞன் என்கிற முத்திரை எம்.ஜே என்று செல்லமாக அழைக்கப்படும் மைக்கேல் ஜாக்ஸனுக்கு உண்டு. தன் சகோதரர்களுடன் ஜாக்ஸன் 5 என்கிற குழுவில் இடம்பிடித்த ஜாக்ஸன் 16 வயதுமுதல் சோலோவாக ஆல்பம் தயாரித்து வந்தார். இவருடைய உச்சம், 1982ல் அதாவது தன் 24வயதில் வெளியிட்ட த்ரில்லர் ஆல்பம். இன்றுவரை உலகில் அதிகம் விற்கப்பட்டு
கின்னஸில் இடம்பிடித்த இசை ஆல்பம். 6.5 கோடி காப்பிகள். அவருடைய அத்தனை ஆல்பங்களும் இதுவரை 20 கோடி காப்பிகள் விற்றுள்ளன (1700 கோடி ரூபாய்க்கு விற்பனை). எந்த இசைக்கலைஞனாலும் எட்டமுடியாத சாதனை இது. இவர்போல இன்னொரு கலைஞன் இனியில்லை என்று ஏ.ஆர். ரஹ்மான் மைக்கேல் ஜாக்ஸன் இறந்த சில மணி நேரங்களில் அஞ்சலி அறிக்கை வெளியிட்டுள்ளார். எம்.ஜே இன்றி நாங்களில்லை என்கிறார்கள் பிரபுதேவாவும் பிரபல ஹிந்தி நடனக்கலைஞர் ஃபரா கானும். விமர்சனங்கள் மலிந்துள்ள இந்த உலகில் மைக்கேல் ஜான்ஸனின் திறமையையும் மதிப்பையும் கைநீட்டி குறை சொல்ல ஒருவரும் இல்லை என்பதுதான் எம்.ஜேவின் 30 வருட இசைப் பயணத்தின் தன்னிகரற்ற சாதனை.





மைக்கேல் ஜாக்ஸனின் பெரிய சொத்து, ரசிகர்களின் வெறித்தனமான அன்பு என்றாலும் கணக்கு வழக்குக்குச் சொல்லவேண்டுமென்றால் இதுவரை மைக்கேல் ஜாக்ஸன் என்கிற பிராண்ட் மூலமாக அவர் சம்பாதித்தது - 2500 கோடி ரூபாய். முக்கியமாக 1980 மற்றும் 1990களில் வருடத்துக்கு 250 கோடியை மிக எளிதாக சம்பாதித்து வந்தார். பாப் உலகுக்கு எம்.ஜேவை விட்டால் வேறு கலைஞனில்லை என்றிருந்த காலகட்டம் அது. ஆனால் இன்று மைக்கேல் ஜாக்ஸனின் கடன்தொகை 2500 கோடிக்குச் சென்று நிற்கிறது. எப்படி இப்படி ஆனது?

காசை கண்டபடி செலவு செய்து உல்லாசியாக வாழ்ந்தவர் என்றொரு அழுத்தமான குற்றச்சாட்டு மைக்கேல் ஜாக்ஸன் மீது உண்டு. லாஸ் ஏஞ்சல்ஸில் அவர் வாழ்ந்துவந்த வாடகை வீட்டின் மாத வாடகை மட்டும் 50 லட்சம். எங்கு சென்றாலும் இரண்டு தனி விமானங்கள். கூடவே இருபது உதவியாளர்கள். செலவுக்கும் வரவுக்கும் ஈடுகட்ட முடியாமல் 350 கோடி ரூபாயை பேங்க் ஆஃப் அமெரிக்காவிலிருந்து கடனாகப் பெற்றார் எம்.ஜே. பிரிட்னி ஸ்பியர்ஸ் போன்ற சமகால பாப் பாடகிகள் ஒரு பாப் ஆல்பத்துக்கு 25 கோடி ரூபாய் செலவிடுவார்கள் என்றால் 2001ல் வெளியிடப்பட்ட ’இன்விசிபிள்’ என்கிற தன் இறுதி ஆல்பத்துக்கு எம்.ஜே செலவிட்ட தொகை 125 கோடி. சமீபத்தில் நியூயார்க்கில் ஓர் ஐந்து நட்சத்திர விடுதியில் சில மணி நேரங்களில் தங்கியதற்கு எம்.ஜே செலுத்திய பில்லின் தொகை 5 கோடி. ஒருமுறை லாஸ் வேகாஸில் உள்ள ஒரு கடையில் 5 லட்சத்துக்கு செண்ட் பாட்டில் வாங்கியிருக்கிறார். இப்படி உல்லாச வாழ்க்கைக்குரிய தினசரி நடவடிக்கைகள், கோர்ட் செட்டில்மெண்டுகள், வருமான வரி, ஊழியர்கள் சம்பளம், அதீதப் போக்குவரத்துச் செலவு, சொத்துக்களின் பராமரிப்புச் செலவுகள் போன்ற காரணங்களால் வரவு எட்டணா செலவு பத்தணா என்கிற வாழ்க்கையையே இறுதிவரை வாழ்ந்து வந்தார் மைக்கேல் ஜாக்ஸன். ஆல்பம் ிற்பனையில் இன்றைக்கும் எம்.ஜேவுக்கு ஒவ்வொரு வருடமும் 100 கோடி ருபாய் வருமானம் ராயல்டியாகக் கிடைக்கிறது. ஆனால் அவருடைய ஒரு வருட செலவு 150 கோடி ரூபாய் என்பதால் இறக்கும்போது ‘2500 கோடி ரூபாய் கடனாளி’ என்கிற கெட்டப்பெயர் அவருக்குக் கிடைத்துவிட்டது.

செலவு தாக்குப் பிடிக்காமல் தீம் பார்க் மற்றும் உயிரியல் பூங்கா போன்ற உல்லாச வசதிகள் கொண்டிருந்த தனது அழகான 2500 ஏக்கர் பரப்பளவு கொண்ட நெவர்லேண்ட் பண்ணையை முதலில் அடமானத்துக்கு வைத்து பிறகு விற்பனை செய்துவிட்டார் எம்.ஜே. அந்தப் பண்ணையில்தான் அவர் சிறுவர்களுடன் தவறாக ாரியங்களில் ஈடுபடுகிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்ததால் வெறுத்துப்போய் அதை விற்று மனச்சுமையின்றி சிறிது காலம் வாழ எண்ணினார். தன் வீட்டு நிலங்கள், சோனியுடனான பங்குகள் என்று மைக்கேல் ஜாக்ஸனின் சொத்து மதிப்பு 500 கோடி என்று அறியப்பட்டாலும் அந்தப் பணத்தைக் கொண்டு உடனடியாகக் கடனை அடைக்கமுடியாது என்பதால் பண்ணையிலிருந்த தன் ஆயிரம் உடைமைகளை ஏலத்தில் விற்க முதலில் அனுமதித்தார் எம்.ஜே. 15 கோடிவரை அவருடைய பொருள்கள் விலைபோகும் என்றும் அவரது கிளவுஸ் மட்டும் 10 லட்சத்துக்கு ஏலம் போகும் என்றும்
ஏலவிற்பனை பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது. பிறகு என்ன நினைத்தாரோ திடீரென ஏல திட்டத்தை தடுத்து நிறுத்திவிட்டார். இதனால் இறுதிவரை ஜாக்ஸனின் வட்டிக்கடன் நாளுக்கு நாள் குட்டிப் போட்டுக்கொண்டே போனது. தன் பாடல்கள் உரிமை மற்றும்
பிரபல பாப் குழுவான பீட்டில்ஸின் பாடல்கள் உரிமை (சோனியுடனான கூட்டு உரிமை) ஆகிய இவ்விரு உரிமங்கள் மட்டுமே கடைசிக்காலத்தில் எம்.ஜேவுக்கு தொடர்ந்து வருமானம் கொடுத்துக்கொண்டிருந்தன.

மேற்கு நாட்டில் சர்ச்சைகளில், வம்பு வழக்குகளில் சிக்காத இசைக்கலைஞர்களே கிடையாது. அதிலும் மைக்கேல் ஜாக்ஸன் அத்தனை பேருக்கும் பெரியண்ணன் என்றுகூடச் சொல்லலாம்.






அது ஒரு ஷேம் ஷேம் பப்பிஷேம் விவகாரம். விசிறி என்றுதான்ஆரம்பத்தில் எம்.ஜேவுடன் அறிமுகமானார் இவான் சண்ட்லர். சில மாதங்களில் இவான் எம்.ஜேவின் நெருங்கிய நண்பரானார். எம்.ஜேவின் வீட்டுக்கு அடிக்கடி இவானின் 13 வயது மகன் ஜார்டன் வர ஆரம்பித்தான். அவனும் ஒரு மைக்கேல் ஜாக்ஸன் பித்து. திடீரென ஒருநாள், மைக்கேல் ஜாக்ஸன் என் மகனை கெடுத்துவிட்டார் என்று இவான் ஊரைக் கூட்டியபோது சீச்சீய் என்று எம்.ஜே ரசிகர்கள் முகம் சுழித்தனர். ஆம். என் மகனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்திருக்கிறார். ஆணுறுப்பை வருடியிருக்கிறார். இன்னும் என்னென்னவோ அசிங்கங்கள் அவருக்கும் என் மகனுக்கும் இடையே நடந்துள்ளன என்று கூப்பாடு போட்டு நீதிமன்றத்தை நாடியபோது மைக்கேல் ஜாக்ஸனின் பரிசுத்த ஆவி இமேஜ் அந்த தருணத்தில் தகர்ந்துபோனது. ஒருவழியாக 110 கோடி ரூபாயை இவானின் கையில் திணித்து பிரச்னையைச் சரிகட்டினார் எம்.ஜே. இந்தச் சமயத்தில் எம்.ஜேவின் பால்யகால தோழியும் எல்விஸ் ிரிஸ்லியின் மகளுமான லிசா மேரி, எம்.ஜேவுக்கு பெரிய ஆறுதலாக இருந்தது அப்படியே அவரை எம்.ஜேவின் மனைவியாகவும் ஆக்கியது. இந்த பந்தம் ஒன்றரை வருடங்கள் நீடித்தன. பிறகு, தன் தோல் நோய்க்கு சிகிச்சை அளித்த செவிலி, ஜியான் ரோவை முதலில் கர்ப்பமாக்கிவிட்டு பிறகு திருமணம் செய்துகொண்டார் எம்.ஜே. இந்த உறவும் இரண்டு வருடத்திற்குள் காலாவதியாகிப் போனது. ரோவுடனான உறவுக்குப் பரிசாக ஜாக்ஸனுக்கு இரண்டு குழந்தைகள். மனைவி இல்லாவிட்டால் என்ன என்று வாடகைத் தாய் மூலமாக மூன்றாவது குழந்தையைப் பெற்றுக்கொண்டார் எம்.ஜே. ஆனால் மூன்றாவது மகனின் தாயை இறுதிவரை வெளி உலகுக்குக் காட்டவில்லை. தன்மூன்று குழந்தைகளுக்கும் தாயும் தகப்பனுமாக தானே இருந்து அக்கறையாக வளர்த்து வந்தார்.

2005லும் ஒரு பாலியல் பிரச்னை எம்.ஜேவின் இமேஜை உலுக்கியெடுத்தது. ஒரு டாகுமெண்டரிக்காக கவின் அர்விஸோ என்கிற 13 வயது சிறுவனுடன் இணைந்து பேட்டி கொடுத்த எம்.ஜே, கவின் தன்னுடைய நெருக்கமான நண்பன் என்றும் இருவரும் ஒரே படுக்கையில்தான் துயில்வோம் என்றும் வெள்ளந்தியாகப் பேசிவைக்க அது கவினின் பெற்றோரைக் கலவரப்படுத்தியது. அடுத்த சில நாள்களில் எம்.ஜே மீதான மற்றொரு பாலியல் தொந்தரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ழக்குக்காகக் கைதானார் எம்.ஜே. இரண்டு வருடங்கள் கழித்து நிரபராதி என்கிற முத்திரையோடு வழக்கிலிருந்து விடுபட்டார் எம்.ஜே. ஆனால், ’ஆண்களுடன் குறிப்பாக சிறுவர்களுடன் படுக்கையில் ஒன்றாகப் படுப்பது செளகரியமாக இருக்கிறது’ என்று டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டி அவர்மீதான கறையை மேலும் ளிச்சென்று காட்டியது.





பாலியல் குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட பிறகு அமெரிக்காவை வெறுத்தார் அவர். தன் இறுதி மூச்சை பஹ்ரைனில் விடவேண்டும் என்று விரும்பினார். திடீரென்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இன்றுமுதல் நான் ஒரு முஸ்லீம். இனி என்னை எல்லோரும் மிகயில் என்று அழைக்கவும். மெரிக்க வாழ்க்கையை விட்டொழித்துவிட்டு நான் நிரந்தரமாக பஹ்ரைனில் குடியேறப் போகிறேன் என்றார் தீர்மானமாக. பஹ்ரைன் நாட்டு மன்னரின் இரண்டாவது மகனான சைக் அப்துல்லாவும் எம்.ஜேவும் சிறிது காலம் முஸ்தபா முஸ்தபா பாடிக்கொண்டிருந்தார்கள். அந்த நட்பு வேகத்தில் அப்துல்லாவுக்கு கண்மூடித்தனமான வாக்குறுதிகளை அள்ளி வீசினார் எம்.ஜே. நிச்சயம் உங்களுக்காக ஒரு ஆல்பம், என் வாழ்க்கை வரலாறை நீங்கள்தான் வெளியிடுகிறீர்கள். இவ்வாறு சொல்லிக்கொண்டு என்னிடம் பணம் வாங்கி மோசடி செய்துவிட்டார் என்று பஹ்ரைன் இளவரசர் திடீரென ஒருநாள் 38 கோடிக்கு எம்.ஜே மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தது எம்.ஜேவின் பஹ்ரைன் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

வழக்கு விவகார தருணங்களில் தன் உடல் நிலையை மிகவும் மோசமாக்கிக்கொண்டார் எம்.ஜே.1979ம் ஆண்டு முதலே தன் உடலை சித்ரவதை செய்துகொண்டு அல்லது தன் உடலால் சித்ரவதைப்பட்டு வருகிறார் ஜாக்ஸன். 21வது வயதில் மேடை நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் காயம்பட்ட ஜாக்ஸன் தன் மூக்கின்
அமைப்பை கொஞ்சம் தட்டி, ஒட்டி சரிசெய்துகொண்டார். நம் ஊரில் ஸ்ரீதேவி தன் முக அமைப்பை மாற்றியமைத்துக்கொண்டாரே அதேபோல. 80களில் ஜாக்ஸனுக்கு 'விட்டிலிகோ’ எனப்படும் வெண்தாமரை நோயில் சிக்கினார். அவர் உடலெங்கும் வெள்ளைத் திட்டுகள் தென்பட ஆரம்பித்தன. இந்த தோல் நோயின் தீவிரம் அதிகமாகி அவர் முகத்தின்
தன்மையையே மாற்றியமைத்தது. கறுப்பு நிறத்தால் ஏற்கனவே
தாழ்வு மனப்பான்மையில் உழன்று கொண்டிருந்த எம்.ஜேவும் சும்மா இருக்காமல் முகத்தில் நான்கு இடங்களில் உருவ மாற்ற அறுவை சிகிச்சை செய்து பல ஊசிகள், மருந்துகள் உட்கொண்டு பால் வெள்ளை தோலுக்காக மேலும் மேலும் தன் முகத்தை ரணமாக்கிக்கொண்டார். அடிக்கடி வழக்குகளுக்காக கோர்ட்டுக்கு சென்ற அலைச்சலில் சரியாகச் சாப்பிடாமலும் இருந்தார். சைவத்துக்கு மாறிய அவர் ெலிதான உடற்கட்டை பாதுகாக்க சாப்பிடுவதையே ெறுத்து ஒதுக்கினார். மருந்தே உணவென வாழ்ந்த அவருடைய எடை ருகட்டத்தில் 48 கிலோ அளவுக்குக்கூட குறைந்திருக்கிறது. கடைசிக்கால கட்டத்தில் அவருக்குப் புற்று நோய், நுரையீரல்
பாதிப்பு போன்ற பெரிய நோய்களும் தாக்கவே பல வருடங்கள் வீட்டுக்குள்ளேயே சுருண்டுக் கிடக்க வேண்டிய நிலைமை வந்தது.





ராணுவத்தினர் அணியும் சீருடைகளில் மாற்றம் செய்து அணிவது, கைகளில் க்ளவுஸ், உடைகளில் வைரம் பதிப்பது, ஷார்ட் பேண்ட்… இப்படி ஜாக்ஸன் அணிந்த உடைகள் அனைத்தும் நாகரிக ாற்றத்தின் ஆரம்பமாக, ஃபேஷன் அடையாளமாக அமைந்தன. த்ரில்லர், பேட், டேஞ்சரஸ், பில்லி ஜீன் போன்ற ஆல்பங்கள் எல்லாம் இன்றைக்கும்
இளைஞர்களுக்கு இசை போதை. நெற்றிமுன் சரிந்து விழும் கற்றைமுடியோடு மைக்கேல் ஜாக்ஸன் மேடையில் பிரசன்னமானவுடனே கடவுளை நேரில் பார்த்ததுபோல ரசிகர்கள் நெக்குருகிப் போய்க் கதறி அழுவார்கள். காட்டுக்கூச்சல் போடுவார்கள். அப்படியொரு பரவச அழுகை, மயிர்க்கூச்செரிப்பு இனி வாய்க்கப்போவதில்லை. இனியொரு 'பேட்’ பாயை இந்த நூற்றாண்டு சந்திக்கப்போவதில்லை.

  





No comments:

Post a Comment