Powered By Blogger

Friday, October 31, 2014

திருப்பம் தரும் திருப்பதி!!!




திருப்பம் தரும் திருப்பதி விசேஷ தகவல்கள்

 



திருப்பதி வெங்கடாசலபதி, பக்தர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றி வைப்பவர். அதோடு, பிறப்பு - இறப்பு வட்டத்திலிருந்து மனிதனை விடுவித்து, அவனுக்கு முக்தி அளிக்கக்கூடிய சக்தி படைத்த ஒரே கடவுள் அவர். புராணங்கள், சாத்திரங்கள், தல புராணங்கள், மற்றும் அவதார மகிமையை எடுத்துரைக்கும் பக்திப் பாடல்கள் ஆகியவை இதற்குச் சாட்சியாக விளங்கு கின்றன. திருப்பதி வேங்கடா சலபதியின் கோவிலின் செல்வச் செழிப்பையும் அதன் பிரபலத்தையும் எடுத்துக்காட்டும் ஒரு சில புள்ளிவிபரங்கள். இதோ உங்கள் பார்வைக்காக .
* 32,000 ஹெக்டேரில் பரவிக் கிடக்கும் மரங்கள் மற்றும் மலைக்காடுகள். இவற்றில் ஏராளமான சந்தன மரங்களும் உள்ளன. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் மலர்களை உபயோகிக்கும் கோவிலும் இதுதான். ஒரு நாளைக்கு 380 டன் பூக்கள் இக்கோவிலில் உபயோகிக்கப்படுகின்றன.
* திருமலை திருப்பதி தேவஸ்தானம், மேல்திருப்பதி மலையில் 100 ஹெக்டேர் பரப்பில் பூந்தோட்டம் ஒன்றைப் பராமரித்து வருகிறது.
* திருமலை திருப்பதி தேவஸ்தானம் 14,000 பேரை வேலைக்கு அமர்த்தி உள்ளது. அவர்கள் 48 வெவ்வேறு துறைகளில் வேலை செய்கின்றனர். நாட்டிலேயே மிகப் பெரிய கோவில் நிர்வாக அமைப்பு இதுதான். ஒரே கோவிலில் அதிகபட்ச எண்ணிக் கையில் பணியாளர்கள் நியமிக்கபட்டிருப்பதும் இக்கோவிலில்தான். வருடத்தின் அனைத்து நாட்களிலும் தினசரி 600 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுத்தம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பில் 3000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரே நிர்வாகத்தின்கீழ் வழங்கப்படும் தங்கும் விடுதிகளை அமைத்துள்ளதில் இது முதலிடத்தை வகிக்கிறது. இங்கு 7200 அறைகள், குடில்கள் மற்றும் சத்திரங்கள் இருக்கின்றன. இதில் நாள் ஒன்றுக்கு 60,000 பேர் தங்கலாம்.
தினமும்சுமார் 60,000 யாத்திரீகர்களுக்குத் தினசரி இலவச உணவு வழங்கப்படுகிறது.லட்டு தயாரிப்புக்காக மற்று ஆலய ப்பணிகளுக்காக மிக அதிக எண்ணிக்கையில் நெய்யைப் பயன்படுத்தும் கோயில் இது. வருடத்துக்கு 1,800 டன்கள். மிக அதிக அளவில் மின்சக்தியைப் பயன்படுத்தும் கோவிலும் இதுதான். ஒரு மாதத்துக்குதிற்கு 2 கோடி யூனிட்டுகள். நாட்டி லேயே பெரிய அளவில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி உணவும் பிரசாதமும் தயாரிக்கும் கோவில் இது. ஒரு மணி நேரத்திற்கு 2.2டன் நீராவி இங்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
* 30 கல்வி நிறுவனங்கள், 3 பல்கலைக்கழகங்கள், மற்றும் 10 மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றை இக்கோவில் நிர்வகித்து வருகிறது.
கணினித் தொழில்நுட்பத்தைப் பரந்த அளவில் பயன் படுத்தும் முதல் கோயில் இதுதான். இக்கோவிலுக்கு என்று தனியாக ஒரு 'கால் சென்டரேஇருக்கிறது. தங்கும் வசதி, தரிசன டிக்கெட், உண்டியல், போக்குவரத்து ஆகியவற்றை இணையத்தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். சம்ஸ்கிருதமொழியைக் கற்றுக் கொடுப்பதற்காக நாட்டிலேயே முதன்முறையாக இங்கு 1,884ல் ஒரு கல்லூரி நிறுவப்பட்டது. நாட்டின் முதல் இசைக் கல்லூரி இங்கு 1959ல் திறக்கப்பட்டது. நாட்டிலேயே முதன்முறையாக, பாரம்பரியச் சிற்பக்கலை மற்றும் கட்டிடக்கலையைப் பயிற்றுவிக்கும் ஒரு பள்ளி இங்கு துவக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாரம்பரியச் சிற்பக் கட்டிடக்கலைப் பள்ளி. நாட்டிலேயே முதன்முறையாக, இலவசமாகச் செயற்கைக் கை, கால்கள் பொருத்தும் மையம் 1981ல் இங்கு துவக்கப்பட்டது. நாட்டில் முதன்முறையாக, பிச்சைக்காரர்களுக்காக, படுக்கைகள், சாப்பாடு, மருத்துவ வசதி, ஆடைகள் ஆகியவற்றை வழங்கும் பிச்சைக்காரர்கள் இல்லம் இங்கு துவக்கப்பட்டது.தொழுநோயாளிகளுக்காக நாட்டிலேயே பெரிய தொழுநோய் இல்லம் இங்கு துவக்கப்பட்டது. அதில் இலவச மருத்துவ வசதி மற்றும் பராமரிப்புச் சேவை ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டிலேயே முதன்முறையாக, அனாதைக் குழந்தைகளுக்கு ஒரு காப்பகம் இங்கு 1943 ல் நிறுவப்பட்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தும அறக்கட்டளைகள்...
1. ஸ்ரீவெங்கடேஸ்வரா அன்னதான அறக்கட்டளை
'மக்களுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் சேவைஎன்ற குறிக்கோளின் அடிப்படையில் எல்லோருக்கும் இலவச உணவு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த அறக்கட்டளை. இந்து சமயப் புராணங்களின்படி பசியுள்ளோருக்கு உணவளித்தல் என்பது புனிதச் சடங்குகள் செய்வதற்கு ஒப்பானது. 1964ல் துவக்கப்பட்ட இந்த அறக்கட்டளை இன்று நாளொன்றுக்கு சுமார் 60,000 பேருக்கு அன்னதானம் செய்து வருகிறது.
2. ஊனமுற்றோருக்கான அறுவைச் சிகிச்சை, ஆய்வு மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளை
இந்த மருத்துவ அமைப்பு, இளம்பிள்ளைவாத நோய், மூளைவளர்ச்சி குன்றிய தன்மை, பிறவி ஊனங்கள், முதுகுத்தண்டு பாதிப்பு, மற்றும் பிற பிரச்சனைகள் தொடர்பானவற்றிற்கு இலவசச் சிகிச்சை அளித்து வருகிறது.
3. ஸ்ரீவேங்கடேஸ்வரா பாரம்பரியப் பாதுகாப்பு அறக் கட்டளை
இந்த அறக்கட்டளை, கோவில்களைப் பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் புனர்நிர்மாணம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது.
4. ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத பாடசாலை அறக்கட்டளை
2007- ல் துவக்கப்பட்ட இந்த அறக்கட்டளை வேதக் கல்வி, வேத அறிவு மற்றும் வேதக் கலாச்சாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக் காகப் பாடுபட்டு வருகிறது.
5. ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யா தான அறக்கட்டளை
வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கின்ற, கல்வியில் சிறந்த மாணவர்கள், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உயர்கல்வி கற்பதற்கு உதவித் தொகை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த அறக்கட்டளை.
6. பத்மாவதி தாயார் நித்ய அன்னப்பிரசாத அறக்கட்டளை
திருச்சானூரில் இருக்கும் பத்மாவதி தாயாரின் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இந்த அறக்கட்டளை இலவசமாக உணவு வழங்கி வருகிறது.
7. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோசம்ரக்ஷண அறக்கட்டளை
புனிதமான பசுவைப் பாதுகாக்கும் மேன்மையான நோக்கத்துடன் இந்த அறக்கட்டளை துவக்கப்பட்டது. திருப்பதியிலுள்ள கோசாலைக்கு வெளியே இருக்கும் பசுக்களின் மேம்பாட்டுக்கான தொழில்நுட்பத் தகவல்களை இந்த அறக்கட்டளை பொதுமக்களுடனும் மாட்டுப் பண்ணை வைத்திருப்பவர்களுடனும் பகிர்ந்து கொள்கிறது.
8. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிராணதான அறக்கட்டளை
சாதி மதப் பாகுபாடின்றி, புற்றுநோய், இதயநோய், மூளை பாதிப்பு, சீறுநீரக பாதிப்பு ஆகியவற்றால் அல்லலுறும் ஏழை எளிய மக்களுக்கு இந்த அறக்கட்டளை இலவசச் சிகிச்சை அளித்து வருகிறது.

தரிசிக்க மூன்று வழிகள்

சுவாமியை தரிசனம் செய்வதற்கு சர்வ தரிசனம், சுதர்ஸன தரிசனம், சீக்கிர தரிசனம் (எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லா மல் 300 ரூபாய் டிக்கெட் எடுத்துச் சென்று தரிசனம் செய்வது) என மூன்று வழிமுறைகள் உள்ளன.
சர்வ தரிசனத்தில், சாதாரண நாட்களில் 8 மணிநேரமும், சுதர்ஸன தரிசனத்தில் மூன்று மணிநேரமும் ஆகிறது. இதற்கென முறையான திட்டமிடல் இல்லாமல், லீவு கிடைத்துவிட்டது என்பதற்காகப் புறப்பட்டுச் சென்று, வெங்கடேசப் பெருமாளைப் பார்க்கப் போய் நெரிசலில் சிக்கி, கால் கடுக்க காத்துக் கிடந்து அவஸ்தைப்பட்டு, சிலர் சுவாமியைப் பார்க்காமலே திரும்பி வந்த கசப்பு உணர்வுதான் காரணம். அப்படிப்பட்ட நிலை பக்தர்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதைத் தவிர்க்க, தரிசனத்தை எளிதாக்க இதோ சில குறிப்புக்கள்:
* உங்கள் திருமலை யாத்திரையை விடுமுறை அல்லாத நாட்களில் தொடருங்கள்.
* திருமலைக்கு செல்லும் முன்பே இரயில் மற்றும் பேருந்து டிக்கட்டுகள், தங்கும்
* வசதிகள் மற்றும் சேவை டிக்கட்டுகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
* திருப்பதிக்கு வந்து சேர்ந்த உடனே சுதர்ஸன் டோக்கன்களை பெறுங்கள்.
* தங்கும் வசதிக்காக உங்கள் குடும்ப உறுப்பினர் அனைவரும் சி.ஆர்.. அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நபர் மட்டும் க்யூவில் காத்திருக்கலாம். மற்றவர்கள் சி.ஆர்.. அலுவலத்திற்கு பக்கத்தில் உள்ள யாத்திரிகர்கள் வசதிக்கூடத்தில் தங்கி ஓய்வு எடுக்கலாம். அங்கு அனைத்து வசதிகளும் உள்ளன.
தகவல் அறிவதற்கு, இரயில் நிலையம், விமான நிலையம், ஆர்.டி.சி. பேருந்து நிலையம், அலிபிரி பேருந்து நிலையம், சத்திரங்கள், அலிபிரி டோல்கேட், மற்றும் ரேணிகுண்ட்டா இரயில் நிலையத்தில் தகவல் மையங்களை அணுகுங்கள்.
 திருமலை திருப்பதி தேவஸ்தானம், காட்ரோடுகளில் பழுதடையும் வாகனங்களை சரிபார்ப்பதற்கு ரோந்து பழுதுபார்ப்பு வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளது. திருமலைக்கு நடந்து செல்பவர்களுக்கு வசதியாக திருப்பதி இரயில் நிலையத்திலிருந்து அலிபிரி வரை இலவசப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நடந்துச் செல்லும் யாத்திரிகர்கள் தங்கள் உடைமைகளை அலிபிரி அடிவாரத்தில் உள்ள கௌண்டரில் செலுத்திவிட்டு மலை ஏறிச்சென்று திருமலை சி.ஆர்.. அலுவலகம் அருகில் உள்ள மண்டபத்தில் இலவசமாக திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். திருப்பதியில் தங்கியிருக்கும் போது ஓய்வு நேரத்தில் உள்ளூர் ஆலய தரிசனம் செய்யுங்கள். திருமலை புனிதம் மற்றும் பரிசுத்தத்தை பாதுகாத்திட தேவஸ்தானத்துடன் ஒத்துழையுங்கள்.  
சுற்றுலா ஸ்தலமாக இருக்குற இடங்கள் யாத்திரை ஸ்தலங்களாக இருக்காது. யாத்திரை ஸ்தலங்களாக இருக்குற இடங்கள் சுற்றுலாதலமா இருக்காது.  திருமலை திருப்பதி தேவஸ்தானம் காலத்துக்கேற்ப செஞ்சுக்கிட்டு வர்ற சீர்திருத்தங்கள் மற்றும் வசதி வாய்ப்புகளுக்குப் பிறகு பக்தர்களுடைய வருகை ரொம்பவே அதிகரிச்சிடுச்சுக்கிட்டு வருது.
நாப்பது ஐம்பது வருஷத்துக்கு முன்பெல்லாம் ஆந்திராவிலும் தமிழ்நாட்டுல சென்னையில இருக்குறவங்கதான் அடிக்கடி வந்து போயிக்கிட்டு இருந்தாங்க. அதுக்குப் பிறகு, தமிழ்நாடு கர்நாடகா, கேரளா என்று பல மாநிலங்களில் இருந்தும் வர ஆரம்பிச்சாங்க. கடந்த 10 வருடங்களா மும்பை, டெல்லி, கல்கத்தா அலகாபாத், காசி போன்ற வட இந்தியாவுலருந்தும் பக்தர்கள் வர ஆரம்பிச்சுட்டாங்க.
நாம எப்படி காசி, கைலாஷ், பதிரிநாத் கேதார்நாத் யாத்திரை போறோமோ அதே மாதிரி வட இந்தியர்கள் வழ்நாளில் ஒருமுறையாவது திருமலைக்கு வரணும்னு நெனைக்கிறாங்க. அமெரிக்கா, ஃபிரான்ஸ், இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுல இருக்குற இந்தியர்களும் இப்போ பெரிய அளவுல வர ஆரம்பிச்சுட்டாங்க.
   வார நாள்ல 50 ஆயிரம் பேர் திருமலைக்கு சாமி கும்பிட வருவாங்க. சனி ஞாயிறு கவர்மெண்ட் ஹாலிடேன்னா, 1 லட்சம் பேருக்கு  மேல வர்றாங்க. ஒரு சாதாரண வி..பியைப் பார்க்கவே நாம அப்பாயின்மென்ட் வாங்கிக்கிட்டு, புறப்படும் போது போன்ல உறுதிபடுத்திக்கிட்டு கிளம்புறோம். வெங்கடாஜலப்தியைப் பாக்கணும்னா அது எவ்வளவு பெரிய விஷயம். அதுக்கு சின்னதா ஒரு திட்டமிடக்கூடாதா?'' என்றவர்,
ஒரு நாளைக்கு மூணு டிரெயின்கள் கீழ்திருப்பதிக்குப் போகுது. 8 பெட்டிகளுடன்த ரெயில்களில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில்லாம பாஸஞ்சர் டிரெயின் ஒண்ணும் போகுது. இவைத் தவிர 9 எக்ஸ்பிரஸ் டிரெயின்கள் ரேணிகுண்டா வரைக்கும் போகுது. அங்கிருந்து திருப்பதிக்கு 12 கிலோ மீட்டர்தான். புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் காட்பாடி வழியாக ஒரு டிரெயின் திருப்பதிக்கு விடப்பட்டுள்ளது. இது தவிர எலக்ட்ரிக் ட்ரெயின் ஒன்றை விடுவது பற்றியும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இவைத் தவிர ஆந்திர அரசுப் பேருந்துகள் அரைமணி நேரத்துக்கு ஒன்று என்கிற விதத்தில் பஸ்கள் இயங்குகின்றன என்றவர், திருவேங்கடமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் பயணத்தை எளிதாக்குவற்கான குறிப்புகளைத் தந்தார். அவற்றை அப்படியே பாடமாக தொகுத்திருக்கிறோம்.
திருமலை யாத்திரையை பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்கலில் இல்லாமல், வார நாட்களில் பயணம் இருப்பது போல் திட்டமிட்டுக் கொண்டால், எளிதாக சுவாமி தரிசனம் செய்து, பயணத்தை இனிதானதாக ஆக்கலாம்.
திருப்பதிக்குச் செல்ல ரெயில் மற்றும் பஸ் டிக்கெட்டுகள், திருமலையில் தங்கும் அறை வசதிகள் மற்றும் தரிசனம் மற்றும் சேவா டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்து கொள்வது நல்லது. ஆன்லைனில் 90 நாட்களுக்கு முன்பாகவும், தேவஸ்தான அலுவலகங்களில் 60 நாட்களுக்கு முன்பாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் முக்கிய நகரங்களில் திருமலை தேவஸ்தான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.திருமலையில் தங்கும் வசதியைப் பெற கணவன் மனைவி இருவரும் செல்ல வேண்டும் தனிநபராக செல்பவருக்கு அறைகள் தரப்படுவதில்லை.
சுதர்ஸன டோக்கன்கள் சுவாமி தரிசனத்துக்காக காத்திருக்கும்  நேரத்தை வெகுவாக குறைக்க உதவும்.சுதர்ஸன் டோக்கன் வசதியைப் பெற திருமலைக்குச் செல்ல திட்டமுட்டுள்ள அனைவரும் ஒன்றாகச் சென்று தரிசன நாள், நேரம் ஆகியவற்றை கைரேகை மற்றும் புகைப்படப் பதிவைச் செய்தாக வேண்டும்.
தங்கும் வசதிக்காக உங்கள் குடும்ப உறுப்பினர் அனைவரும் சி.ஆர்..அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நபர் மட்டும் க்யூவில் காத்திருக்கலாம். மற்றவர்கள் சி.ஆர்.. அலுவலத்துக்கு பக்கத்தில் உள்ள யாத்திரிகர்கள் வசதிக்கூடத்தில் தங்கி ஓய்வு எடுக்கலாம். அங்கு அனைத்து வசதிகளும் உள்ளன. திருமலையில் அறைவசதி கிடைக்காவிட்டாலும்  நாம் கொண்டு செல்லும் பொருட்களை வக்க ஆயிரக்கணக்கான லாக்கர் வசதிகள் உள்ளன. அதில் தங்கள் பொருட்களை வைத்து விட்டு சுவாமி தரிசனம் செய்யலாம்.
திடீரென்று பயணம் மேற்கொள்பவர்களின் வசதிக்காக ரேணிகுண்டா, திருப்பதி பஸ்-ஸ்டாண்டு எதிர்புறம் சீனிவாசன் காம்ப்ளக்ஸ், திருப்பதி ரெயில் நிலையம் அருகே உள்ள விஷ்ணுநிவாஸ்., அலிப்பிரி டோல்கேட் ஆகிய இடங்களில் அதிகாலை 5 மணிக்கு  தொடங்கி, சுதர்சன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் 5 ஆயிரம் டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுவதால், ஃபஸ்ட் கம் சர்வீஸ் அடிப்படையில் வழங்கப்படும் என்பதால் முன்கூட்டியே பதிவு செய்து கொள்வது நல்லது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம், மலைப்பாதையில் செல்லும்போது பழுதடையும் வாகனங்களை சரிபார்ப்பதற்கு ரோந்து பழுதுபார்ப்பு வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளது.
திருமலைக்கு நடந்து செல்பவர்களுக்கு வசதியாக திருப்பதி ரெயில் நிலையத்திலிருந்து அலிப்பிரி வரை இலவசப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.நடந்துச் செல்லும் யாத்திரிகர்கள் தங்கள் உடைமைகளை அலிபிரி அடிவாரத்தில் உள்ள கௌண்டரில் செலுத்திவிட்டு மலை ஏறிச்சென்று திருமலை சி.ஆர்.. அலுவலகம் அருகில் உள்ள மண்டபத்தில் இலவசமாக  திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
கீழ்த்திருப்பதி வந்தவுடன் அங்குள்ள லாக்கர்களில் பொருட்களை வைத்து விட்டு, அலர்மேலு மங்காபுரம், கோவிந்தராஜப் பெருமாளை தரிசித்து விட்டு, மேல் திருப்பதியில், சுவாமி வெங்கடாசலபதியை வழிபடுவதற்கு முன், சுவாமி புஷ்கரிணி தீர்த்தத்தில் புனித நீராடி வராகப் பெருமாளைத் தரிசனம் செய்ய வேண்டும். கோவிலின் விதிமுறைகளைப் பின்பற்றி, கடவுளைத் தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்க வேண்டும்..
கோவில் வளாகத்தில் எச்சில் துப்பவோ அல்லது எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவோ கூடாது. கோவிலின் விதிமுறைகளுக்கும் வழக்கங்களுக்கும் எதிரான எந்த நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடக்கூடாது. கோவில் வளாகங்களில் புகைபிடிக்கக் கூடாது. கோவில் வளாகங்களில் காலணிகள் அணியக்கூடாது.
தங்களது அறையிலோ, வாகனங்களிலோ காலனிகளை விட்டுவிட்டு வெறுங்காலுடன் செல்ல வேண்டும். அல்லது அருகாமையிலிருக்கும் காலனிகள் பாதுகாப்பு மையத்தில் விட்டுச் செல்லலாம். சுவாமி தரிசனம் செய்யச் செல்லும்போது உங்களது செல்போன்களை அறையிலேயே விட்டுச் செல்வது நல்லது. இல்லாவிட்டால், தரிசனம் முடித்துவிட்டு லட்டு கௌண்டருக்குச் சென்று முடித்துவிட்டு, பிறகு செல்போன் பாதுகாப்பு மையத்துக்குசெல்ல வேண்டியிருக்கும்.
திருமலை யாத்திரையின் போது அளவுக்கதிகமான நகைகளையோ, பணத்தையோ உடன் எடுத்துச்செல்லக் கூடாது. முன்பின் அறியாதவர்களிடம் தங்குவதற்கு அறைகள் கேட்கக் கூடாஅது.. முன்பின் அறியாதவர்களை உங்கள் அறையிலும் தங்க வைக்கக்கூடாது..
கோவில் மற்றும் உங்கள் வழிபாடு தொடர்பான தகவல்களுக்குத் திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலகம் ஏதேனும் ஒன்ரைத் தொடர்பு கொள்வது அல்லது லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tவீக்ஷீuனீணீறீணீ.ஷீக்ஷீரீ/ இனையதளத்தின் வழியாக அறியலாம் என்றும் தெரிவித்தார்.

திருப்பதி கோவில்க்கு வந்த பிரபலங்கள்  



Ramcharan with wife
 
Aishwarya raj with Absekbachan














Amithabpachan








Ramcharan-Telugu Actor

Shipasheety







 

                     














No comments:

Post a Comment